யாழ் பல்கலைக்கழகமாணவனால் கண்டுபிடிக்கப்பட்டபுதிய இசைக்கருவி...
வறுமையிலும் சாதிக்கத் துடிக்கும் மாணவன் ஜெயநீதன் புதிய இசைக் கருவியை கண்டு பிடித்துச் சாதனை.
யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைத் துறையில் இறுதியாண்டில் கல்வி கற்கும் இவர் ஜீவ ஜெய நாதம் என்னும் புதிய இசைக் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.
அதனை வெளிக் கொண்டுவருவதற்காக இவ் வாரம் யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற ஆசிரியர் பயிற்சிச் செயலமர்விற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
கிடைக்கின்ற வேலை எதுவாயினும் செய்து கல்வி கற்றுக் கொண்டு வாழத் துடிக்கும் இம் மாணவன் சூழல் சார்ந்த பல கண்டுபிடிப்புக்களையும் வரைந்து வைத்துள்ளார். ஆனால் பணவசதி இல்லாத நிலையில் உள்ளார். இவரின் ஆர்வத்தை ஊக்குவித்து நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவமுடிந்தால் உதவுங்கள் . கொடுமை என்னவென்றால் இம் மாணவனின் திறமை இதுவரை பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்தது தான்
இம்மாணவனின் முயற்சிகும் கண்டுபிடிப்புக்கும் நியூமன்னார் இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.....
யாழ் பல்கலைக்கழகமாணவனால் கண்டுபிடிக்கப்பட்டபுதிய இசைக்கருவி...
Reviewed by Author
on
June 30, 2019
Rating:

No comments:
Post a Comment