சிங்களவர்களுக்கு தமிழர்கள் எதிரிகள் - முஸ்லிம்கள் துரோகிகள் என்கிறார் விமல் -
“பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தால் சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வருகின்றனர். அதேவேளை, சஹ்ரான் குழுவினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியுள்ளனர்.
ஏனெனில், முஸ்லிம்களை சிங்களவர்கள் பெரிதும் நம்பியிருந்தார்கள். ஆனால், அது இன்று தலைகீழாக மாறியுள்ளது.”
இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இந்த நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை உடன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கூறியதுபோல் முஸ்லிம்கள் அனைவரினதும் வீடுகளும் மற்றும் பள்ளவாசல்களும் சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், சஹ்ரான் குழுவினரின் தாக்குதல்களுடன் தொடர்புபட்டனர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் உடன் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
அதேவேளை, குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அந்தத் தண்டனை தூக்குத் தண்டனையாக இருக்க வேண்டும்" - என்று கூறியுள்ளார்.
சிங்களவர்களுக்கு தமிழர்கள் எதிரிகள் - முஸ்லிம்கள் துரோகிகள் என்கிறார் விமல் -
Reviewed by Author
on
June 15, 2019
Rating:
Reviewed by Author
on
June 15, 2019
Rating:


No comments:
Post a Comment