10 கோடி பயனாளர்களின் தகவல் திருட்டு: தற்பெருமையால் சிறை சென்ற அமெரிக்க பெண் -
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்தவர் பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பெய்ஜ் தாம்சன் (33).
இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கேபிடல் ஒன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுமார் 10 கோடி பேரின் கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடியுள்ளார்.
மட்டுமின்றி கனடா நாட்டவர்கள் 6 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களும் இவரால் திருடப்பட்டது.
இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் தாம்சன் சில தினங்களுக்கு முன்னர் சமூகவலைத்தளத்திலும், GitHub என்ற இணையதளத்திலும் தற்பெருமை அடித்துள்ளார்.
குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும், தேவைப்படுபவர்களுக்கு பகிரப்படும் எனவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதை கவனித்த இணையதள பயனாளர் ஒருவர், கேபிடல் ஒன் வங்கிக்கு தகவல் அளித்துள்ளார். வங்கியும் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதை அறிந்து புகார் அளித்துள்ளது.
இதன் அடிப்படையில் தகவல் திருட்டில் ஈடுபட்ட பெய்ஜ் தாம்சனை கைது செய்த எப்பிஐ அதிகாரிகள், திருடி வைத்திருந்த விவரங்களையும் மீட்டுள்ளனர்.
கிரெடிட் கார்டு கார்டு கணக்கு விவரங்களையோ அதற்கான பாஸ்வேர்டுகளையோ பெய்ஜ் தாம்சன் திருடவில்லை.
திருடிய விவரங்களை பயன்படுத்தி நிதிமோசடியில் ஈடுபடவில்லை. இருப்பினும் தகவல் திருட்டுக்காக அவருக்கு 5 ஆண்டுவரை சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் டொலர் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இந்த திருட்டு ஏற்பட்டதை உணர்ந்த கேபிடல் ஒன் வங்கியானது சுமார் 100 முதல் 150 மில்லியன் டொலர் தொகையை பாதுகாப்புக்காக செலவிட நேரிடும் என கணித்திருந்தது.
மட்டுமின்றி அந்த வங்கியின் பங்குகள் சுமார் 5 சதவிகித வீழ்ச்சியையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
10 கோடி பயனாளர்களின் தகவல் திருட்டு: தற்பெருமையால் சிறை சென்ற அமெரிக்க பெண் -
Reviewed by Author
on
July 31, 2019
Rating:

No comments:
Post a Comment