வட மாகாண மாணவர்களின் மகத்தான சாதனை! 19 பதக்கங்களை அள்ளினர் -
வடமாகாணத்தைச் சேர்ந்த வூசு குத்துச்சண்டடை வீரர்கள் தேசிய வூசு குத்துச்சண்டையில் போட்டியில் கலந்துகொண்டு மாகாணம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் 19பதக்கங்களை பெற்று வடமாகாணத்திற்கு பெருமையையும் பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
கடந்த 28,29,30 ஆகிய தினங்களில் மாத்தறையில் தேசிய வூசு குத்துச்சண்டையில் போட்டி இடம்பெற்றது. இதன்போது வடமாகாணத்திலிருந்து பெருமளவிலான இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை அள்ளினர்.
இதன்போது, கலந்துகொண்ட மாணவர்கள் வவுனியா விபுலானந்தாக்கல்லூரி ச. சஞ்சயன் 60கிலோ (18வயது) தங்கம், அ. டனுஜன் 40கிலோ (15வயது கீழ்) , தி. நாகராஜா 50கிலோ (25வயது பிரிவு) வெள்ளி, பா. ராகுலன், 55கிலோ (18வயது கீழ்) வெள்ளி, உக்கிளாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயம் இ.சாருணிக்கா 25கிலோ (7வயது கீழ்) தங்கம் வென்றனர்.
இதேவேளை, வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் க. நிரோஜன் 40கிலோ (18வயது கீழ்) வெண்கலம், வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் வசீகரன், 75கிலோ (18வயது கீழ்) தங்கம், வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி நெ.றோசிமஞ்சு 50கிலோ (25வயதுப்பிரிவு) வெள்ளி, கா.மைக்கல் நிம்றோத் 20கிலோ (7வயது) தங்கம், வவுனியா காமினி தேசிய பாடசாலை ஸ்ரீதர்சன் 60கிலோ (18வயது) தங்கம், ம. கிருபாலினி 50கிலோ (18வயது) தங்கம், ஆர். நவப்பிரியா 35கிலோ (25வயது) தங்கம்,
எஸ். துலக்சன் பிரியா 55கிலோ ( 18வயது பிரிவு) வெள்ளி, மடுகந்த பிரிவென மகாவித்தியாலயம் நிமோசா 55கிலோ ( 18வயது) தங்கம், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் ஆன்மனஸ்வினி 20கிலோ (13வயது கீழ்பிரிவு) வெண்கலம், முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலது கரை மகாவித்தியாலயம் ஜெகதீஸ்வரன் 50கிலோ (18வயது கீழ்) தங்கம்,
முல்லைத்தீவு மாவட்ட வீரர் திருக்குமரன் 60கிலோ (25வயது கீழ்) தங்கம், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை 30கிலோ (1வயது கீழ்) தங்கம், கோவில்குளம் எஸ். நிசாந்தன் 50கிலோ (15வயது கீழ்) தங்கம்.
இவ்வாறு கலந்துகொண்டு 19 முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையைப் பெற்று தங்கம், வெள்ளி , வெண்கலப்பதங்கங்களை பெற்றுக்கொடுத்து வடமாகாணத்திற்கு இரண்டாம் நிலையையும் பெற்றுக்கொடுத்து பெருமை சேர்ந்துள்ளார்கள்.
வட மாகாண மாணவர்களின் மகத்தான சாதனை! 19 பதக்கங்களை அள்ளினர் -
Reviewed by Author
on
July 09, 2019
Rating:

No comments:
Post a Comment