தூக்கத்திலேயே உயிரிழந்த 20 வயதான கோடீஸ்வரர்.. அவர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...
டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் கேமரூன் பாய்ஸ் (20).
இவரின் சொத்து மதிப்பு ஐந்து மில்லியன் டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
குழந்தைகளைக் கவர்ந்த நடிகராக வலம் வந்த கேமரூன், சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கேமரூனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கேமரூனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தூக்கத்திலேயே உயிரிழந்த 20 வயதான கோடீஸ்வரர்.. அவர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...
Reviewed by Author
on
July 09, 2019
Rating:
No comments:
Post a Comment