2000 பேரின் வேலைக்கு உலைவைக்கும் செயல்: நீதிமன்றம் நாடும் பிரபல சுவிஸ் நிறுவனம் -
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் நிறுவனம் Pilatus.
கடந்த 80 ஆண்டுகளாக Pilatus நிறுவனம் ராணுவ பயிற்சி விமானங்களை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாத இறுதியில், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளுக்கு விமானங்களை ஏற்றுமதி செய்யவும், குறிப்பிட்ட நாடுகளில் இருந்து செயல்படவும் Pilatus நிறுவனத்திற்கு சுவிஸ் வெளிவிவகார அமைச்சு தடை விதித்து உத்தரவிட்டது.
மட்டுமின்றி அடுத்த 90 நாட்களில் Pilatus நிறுவனமானது, தொடர்புடைய இரு நாடுகளில் இருந்தும் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டும் எனவும் நாள் குறித்தது.
இந்த தடை உத்தரவானது ஏற்றுக் கொள்ள முடியாதது என காட்டமாக பதிலளித்துள்ள Pilatus நிறுவனம்,
இது தங்களது வளர்ச்சியை சேதப்படுத்தும் செயல் எனவும் சமமற்ற முறை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், கடந்த 80 வருடங்களாக பெயருடன் விளங்கும் ஒரு நிறுவனத்தின் மீது தொடுக்கப்படும் மறைமுக தாக்குதல் மட்டுமல்ல, 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலைக்கும் உலைவக்கும் செயல் என குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய ஆமீரக நாடுகளுடன் Pilatus நிறுவனம் மேற்கொள்ளும் தொழில்நுட்ப உதவியானது சட்டத்திற்கு புறம்பானது என சுட்டிக்காட்டியுள்ள சுவிஸ் வெளிவிவகரா அமைச்சகம்,
அந்த நாடுகள் பயன்படுத்தும் 55 PC-21 ரக ராணுவ பயிற்சி விமானங்களுக்கான உதிரி பாகங்கள் வழங்குவதும் சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்துள்ளது.
2000 பேரின் வேலைக்கு உலைவைக்கும் செயல்: நீதிமன்றம் நாடும் பிரபல சுவிஸ் நிறுவனம் -
Reviewed by Author
on
July 06, 2019
Rating:

No comments:
Post a Comment