வவுனியாவில் வரட்சி காரணமாக 434 ஏக்கர் நெற் செய்கை அழிவடைய வாய்ப்பு! -
வவுனியா மாவட்டத்தில் 6166.6 ஏக்கர் விவசாய நிலத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள கமக்கார அமைப்புக்களினால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனினும் குளங்களில் நீர் மட்டம் குறைவடைந்து காணப்பட்டுள்ளதால் 6303 ஏக்கரில் விதை நிலத்தில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 273 விவசாயிகள் இதனை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியுடனான கால நிலை காரணமாக 120.75 ஏக்கர் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வரட்சியுடனான கால நிலை நீடித்துச் செல்வதால் மேலும் 434 ஏக்கர் நெற் செய்கை அழிவடைய வாய்ப்புள்ளதாக கமநல அபிவிருத்தி மாவட்ட உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் மாவட்ட செயலகத்திற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் வரட்சி காரணமாக 434 ஏக்கர் நெற் செய்கை அழிவடைய வாய்ப்பு! -
Reviewed by Author
on
July 06, 2019
Rating:

No comments:
Post a Comment