அண்மைய செய்திகள்

recent
-

9 பேர் பலி... 30 பேர் கவலைக்கிடம்-மருத்துவமனையில் பெண் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்:


பாகிஸ்தானில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸார் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் தேரா இஸ்மாயில் கான் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்டனர்.
அதனை தொடர்ந்து புர்கா அணிந்து வந்த பெண் ஒருவர் மருத்துவமனை நுழைவு வாயிலில் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் 4 பொலிஸார் மற்றும் உறவினர்களை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வருகை தந்த 3 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் பெண்ணை வைத்து தாக்குதல் நடத்தவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் தலிபான் அமைப்புகள் 20 வருடங்களுக்கு முன் பல்வேறு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஒருபோதும் பெண்களை வைத்து தாக்குதல் நடத்தியதில்லை.

சமீபத்திய ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தான் மற்றும் எல்லை பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் இராணுவம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு வன்முறை குறைந்தாலும், பயங்கரவாதிகள் எப்போதாவது தாக்குதல்களின் மூலம் தங்கள் இருப்பைத் தெரியப்படுத்துகிறார்கள். முக்கியமாக பாதுகாப்புப் படைகள் மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைக்கின்றனர்.

9 பேர் பலி... 30 பேர் கவலைக்கிடம்-மருத்துவமனையில் பெண் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்: Reviewed by Author on July 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.