மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரடி விஜயம்---
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை தொடர்பாக ஆராய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று சனிக்கிழமை மதியம் 13.07.2019 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் அழைப்பின் பேரில் இன்று சனிக்கிழமை மதியம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பொதுவைத்தியசாலைக்குச் சென்று அபிவிருத்திக் குழு நிர்வாகத்துடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கந்தசாமி செந்தூர்பதிராஜா,பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி, மன்னார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.காண்டிபன் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் பிரதிநிதிகளும் இணைந்து கலந்துரையாடினர்.
மன்னார் பொதுவைத்தியசாலையின் குறைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
குறிப்பாக வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு,கிளினிக் பகுதி, குடி நீர் ,மின்சாரப் பகுதி,நோயாளர்விடுதி, உள்ளிட்ட இடங்களையும் நேரடியாக பார்iயிட்டார்.
இதன் போது குறித்த குறைபாடுகளை பிரதமருடனும் மத்திய சுகாதார அமைச்சரிடமும் பேசி குறைகளை நிவர்தி செய்வதாக தெரிவித்ததுடன் ஏனைய மாவட்டத்துடன் ஒப்பிடும் போது மன்னார் பொது வைத்தியசாலை மிகவும் பின் தங்கிக் காணப்படுவதாகவும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான குறைபாடுகள் காணப்படுவதாகவும், இதைக் கருத்தில் கொண்டு மிக அவசரமாக நிவர்த்தி செய்வதற்காக நடவடிக்கையை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Reviewed by Author
on
July 14, 2019
Rating:

No comments:
Post a Comment