தொடர்ந்து பாதிக்கப்படும் பள்ளிமுனை கிராம மீனவர்கள்-அரச அதிகாரிகள் அரசியல்வாதிகள் பாராமுகமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு-படங்கள்
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் அதிகளவான சனத்தொகை கொண்ட கிராமங்களில் பள்ளிமுனை கிராமமும் ஒன்றாகும் கிட்டத்தட்ட 1000 மேற்பட்ட குடும்பங்கள் மீன்பிடி தொழிலயே வாழ்வாதர தொழிலாக கொண்டு வாழ்கின்றனர்.
பள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த மக்கள் 100 வருடங்களுக்கு மேலாக பள்ளிமுனை கடற்பகுதியில் கடற்தொழில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மீன்பிடி ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் தொழில் அட்டை நண்டு இறால் கணவாய் பிடிக்கும் தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் கடலுக்கான நீர்வரத்து குறைவாக காணப்படுகின்றது. அது மாத்திரம் இன்றி காலை நேரங்களில் கடலில் நீர் அற்றும் காணப்படுகின்றது.
இதனால் தாங்கள் தொடர்சியாக மீன்பிடிதொழில் ஈடுபட முடியாத நிலைகாணப்படுவதாகவும் படகுகள் மீன்பிடி உபகரணங்களை கடல் பகுதிக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றானர். கடற்கரையூடாக கடலுடன் இணைக்கும் பிரதான வள்ள ஓடு பாதையானது நீர் அற்று காணப்படுவதால் படகுகளை கரையில் இருந்து கடலுக்கு கொண்டு செல்வது பெரும் சிரமமாக காணப்படுகிறதாக மீனவர்கள் தெரிவிக்கின்ரனர்
சில நேரங்களில் கட்டாயம் வாழ்வாதாரத்திற்காக தொழில் ஈடுபடவேண்டும் என்பதற்காக படகுகளை ஏனைய மீனவர்களுடன் பல கிலோமீற்றர் தூக்கிச்செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தாங்கள் தொடர்ச்சியாக ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடலில் பிடிக்கும் மீன்களை கரைக்கு படகு மூலமாக கொண்டு வர முடியாமையினால் தொழிலில் கிடைக்கப்பெற்ற கடல் உணவுகளை சுமார் 3 கிலோமீற்றருக்கு மேல் தோலில் சுமந்து கரையை அடைய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக பல முறை அரச அதிகாரிகள் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் கோரிக்கை முன் வைக்கப்பட்ட போதிலும் பல முறை பிரதேச மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனைவரது கவனத்திற்கும் கொண்டுவந்த போதிலும் இது வரை யாரும் கண்டு கொள்ளவில்லை எனவும் வெகு விரைவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த படகு பாதையை சீரமைத்து தருமாறு அதே நேரத்தில் படகுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்துவதற்கான இறங்குதுறை ஒன்றையும் அமைத்து தருமாறு குறித்த மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதே நேரத்தில் குறித்த கடல் பகுதியில் கடற்படையினர் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் அவர்களுடைய படகுகளை கூட கடற்பகுதிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணாப்படுகின்றது.

Reviewed by Author
on
July 14, 2019
Rating:

No comments:
Post a Comment