திருடிச் செல்லப்படும் கல்வெட்டுக்கள்! அழிக்கப்படும் வரலாறுகள்
திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் உள்ள தென்னை மரவெடி கிராமத்தில் காணப்படும் கல்வெட்டுக்கள் மற்றும் வரவாற்று அடையாளங்கள் என்பன அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் திருடி செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி பிரதேசம் 31டீ பிரிவில், தமிழர் தாயக பிரதேசமான வடக்கையும் கிழக்கையும் புவியியல் ரீதியாக இணைத்து நிற்கும் கிராமமாக தென்னமரவடி எனும் பழமைமிக்க தமிழ் கிராமம் காணப்படுகின்றது.
எனினும் 1980 களில் பல தொன்மை சிறப்புடைய இக்கிராமத்தின் பல கல்வெட்டுக்களை இல்லாமல் ஆக்கி அகழ்வாராட்சி என்ற பெயரில் பல வரலாற்று அடையாளங்களை திருடிச்செல்லப்பட்டுள்ளது.
கந்தசாமி மலை பிரதேசத்தில் இன்றும் பல தொன்மை அடையாளங்களும், பழம் பெரும் முருகன் ஆலயமும் அமைந்துள்ளது.
இருப்பினும் தமது வழிபாட்டு தளத்திற்கு செல்லமுடியாதவாறு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் தடைவிதித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருடிச் செல்லப்படும் கல்வெட்டுக்கள்! அழிக்கப்படும் வரலாறுகள்
Reviewed by Author
on
July 22, 2019
Rating:

No comments:
Post a Comment