மட்டக்களப்பில் தமிழர்களின் காணிகளை கூடிய விலைக்கு கொள்வனவு செய்யும் முஸ்லிம்கள் -
மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தும், மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் சென்ற இடங்கள் எல்லாம், காணிகள், உரித்துக்கள் பறிபோகின்றதாகவும், இதற்கு காரணமாக முஸ்லிம்கள் இருப்பதாகவும் மக்களால் என்னிடம் கூறப்பட்டது.அதாவது குறைந்த விலையில் உள்ள காணிகளை கூடிய விலை கொடுத்து வாங்குவதாக கூறப்படுகின்றது. எமது மக்கள் ஏதோவொரு காரணத்திற்காக விற்பனை செய்து விட்டு சென்றார்கள் என்றால் அந்த இடத்தில் வந்து முஸ்லிம்கள் குடியிருக்கின்றார்கள். வறுமையின் காரணமாக எமது பெண்கள் மதமாறுவது பிரச்சினையாக உள்ளது. இதனால் எமது உரித்துக்கள் பறிபோகின்றன. இவற்றுக்கெல்லாம் எவ்வாறு முகம்கொடுக்க வேண்டும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நாங்கள் எங்களைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் பலமாக இருந்தால் எங்கள் பெண்கள் வெளியில் போக மாட்டார்கள், எங்களது காணிகளை மற்றவர்கள் கொள்வனவு செய்வதற்கு அவசியம் இருக்காது.
ஏனெனில் நாம் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமைக்கு வந்தால் எமது காணிகளை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஏழ்மை நிலையில், வசதியற்ற நிலையில் இருந்தோமானால் மற்றவர்களின் சதிக்குள் செல்ல வேண்டிய நிலைவரும்.
தங்கள் வாழ்க்கை நிலைமையை மாற்ற சகலதையும் செய்ய வேண்டும். உங்கள் கிராமத்தை முன்னேற்ற நீங்கள் முன்வர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எங்களால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும்.
புதிய வாழ்க்கையை கொண்டு வரவுள்ளோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும். அத்தோடு பொறுமையும் இருக்க வேண்டும். எங்களுடைய கனிய வளங்களை பெறுவதற்காக மக்களிடம் பல பொய்களை கூறி வளத்தினை பெற்றுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.
எனவே இதனை எவ்வாறு தடை செய்யலாம், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம், இதனை பாதுக்காக என்ன செய்ய வேண்டும் என்று பல கோணங்களில் இருந்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எமது தமிழ் மக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எல்லாம் போய் விட்டது இனி என்ன நடக்கப் போகின்றதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளதை நான் காண்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுவேந்திரன், ஊடகம் மற்றும் செயற்றிட்ட ஆக்க உப செயலாளர் த.சிற்பரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
புதிய இணைப்பு
இதன்போது வட தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் இரா.மயூரன் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண மக்கள் முஸ்லிம்களிடம் இருந்து தப்புவதற்கு சிங்களவர்களுடன் கைசேர்க்கும் எண்ணம் உள்ளதை அறியக் கூடியதாக காணப்படுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அடிபணிவு போக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் முஸ்லிம்களால் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
இவர்களிடம் இருந்து தப்புவதற்கு சிங்களவர்களுடன் கைசேர்ந்தால் என்ன என்று கிழக்கு மாகாண மக்கள் மனதில் உள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளீர்கள். இணக்க அரசியல் எக்காலத்தில் வெற்றி பெற போவதில்லை.
30 வருட விடுதலைப் போராட்டத்தில் மக்களை பிரிக்க வேண்டும் என்பதற்காக இணக்க அரசியலை அரசாங்கம் கையில் எடுத்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கில் தமிழன் வீரமுள்ள தமிழாக வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் பூர்வீக தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கவே நாங்கள் முன்வந்துள்ளோம். நாங்கள் தேர்தலுக்காக வரவில்லை.
எமது மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து கொள்வதற்கான வந்துள்ளோம்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். ஏன் நாளுக்கு நாள் எமது காணிகளையும் இழந்து கொண்டு வருகின்றோம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பில் தமிழர்களின் காணிகளை கூடிய விலைக்கு கொள்வனவு செய்யும் முஸ்லிம்கள் -
Reviewed by Author
on
July 22, 2019
Rating:

No comments:
Post a Comment