வெளிநாட்டில் பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த இளம்திருநங்கைக்கு கிடைத்த கெளரவம் -
ஓன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் பிறந்து ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொழில்நுட்பம், பேஷன் சார்ந்த பணிகளைச் செய்த திருநங்கை சம்யுக்தா விஜயன் தற்போது இந்நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அமேசான் போன்ற நிறுவனங்களில் அவர் பணிபுரிந்து வந்த நிலையிலேயே தற்போது ஸ்விக்கியில் அவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சம்யுக்தா, மூன்றாம் பாலினத்தவர்கள் பலரும் கல்வித்தகுதியில் பின் தங்கியுள்ளனர்.
எனக்கு குடும்பத்தின் ஆதரவு இருந்தது. அதனால் நான் மேற்கொண்டு முன்னேறினேன். தகுதி வாய்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த இளம்திருநங்கைக்கு கிடைத்த கெளரவம் -
Reviewed by Author
on
July 13, 2019
Rating:
No comments:
Post a Comment