வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்காவின் முக்கிய நகரம்!
லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லியன்ஸ் நகரில், ‘பேரி’ புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது.
கடந்த புதன்கிழமை முதல் பெய்து வரும் இந்த கனமழையால், அங்குள்ள மிசிசிப்பி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வீடுகள், சாலைகளை வெள்ளம் ஆக்கிரமித்துள்ளது.

இதனால் நியூ ஓர்லியன்ஸ் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் பேரி புயல் கரையை கடந்து வருவதால், மழையின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்களுடன் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்காவின் முக்கிய நகரம்!
Reviewed by Author
on
July 13, 2019
Rating:
No comments:
Post a Comment