அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மறைசாட்சிகளை சான்றுபடுத்த அவர்களின் எலும்புகளை அமெரிக்காவுக்கு அனுப்ப முடிவு ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ

மன்னார் தோட்டவெளியில் மறைசாட்சிகளாக இரத்தம் சிந்தியவர்களை
புனிதர்களாக்குவதற்கு சான்றாக தோட்டவெளியில் அவர்களின் கல்லறையில்இருக்கும் ஓரிரு எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்ள எண்ணியிருப்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகளின் 475 வது ஆண்டு நிறைவு விழாவை
முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்திலுள்ள 21 கிராமங்கள் உள்ளடக்கப்பட்டமன்னார் மறைசாட்சிகள் சமூகநல அமைப்பின் ஏற்பாட்டில் இவ் நினைவு விழா தோட்டவெளி வேதசாட்சிகளின் திருத்தலத்தில் நடைபெற்றது.

பங்குத் தந்தை அருட்பணி அலெக்ஸ்சாண்டர் பெனோ சில்வா அடிகளார் தலைமையில் நடைபெற்ற இவ் நினைவு விழாவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை கலந்து கொண்டு அவரின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இவ் கூட்டுத்திருப்பலியில் அருட்பணியாளர்கள் இ.செபமாலை, ஜெஸ்லி
ஜேகானந்தன், பெனோ சில்வா அடிகளார்களும் இணைந்து ஒப்புக்கொடுத்தனர். இங்கு ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தனது மறையுரையில் தொடர்ந்து
தெரிவிக்கையில்

மன்னார் தோட்டவெளி மறைசாட்சிகளின் 475 வது ஆண்டு நிறைவு விழாவை மன்னார் மறைசாட்சிகளின் சமூகநல அமைப்பின் ஏற்பாட்டில் நினைவு கூர்ந்து இவ் திருப்பலியில் நாம் பங்கு கொண்டுள்ளோம்.

இன்றைய திருப்பலி வாசகத்தில் இயேசு நீங்கள் பேறுபெற்றோர் என்று
அழைக்கின்றார். நீங்கள் எவ்வளவு இயேசுவோடு இருக்கின்றபோது துயருரலாம்,
நீதிக்காக பணிபுரியலாம், இரக்கம் உள்ளவர்களாக இருக்கலாம், தூய உள்ளம்
கொண்டவர்களாக இருக்கலாம் அத்துடன் அமைதி ஏற்படுத்துவோராக இருக்கலாம் அல்லது நீதியின் பொருட்டு நீங்கள் துன்புறுவோராக இருக்கலாம் இவ்வாரானவர்களை இறைவன் பேறுபெற்றோர் என அழைக்கின்றார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான நிகழ்வு இன்றும் உலகம் முழுவதும் இது தொனித்துக் கொண்டிருக்கின்றது.

 கத்தோலிக்க திருச்சபை இலங்கை அவை மக்கள் கிறிஸ்து உயிர்ப்பு தினத்தன்று ஆலயங்களில் இறைவனை புகழ்ந்து கொண்டிருந்த வேளையில் தங்கள் உயிரை இழந்தார்கள்.

இதனால் இன்று அவர்கள் மறைசாட்சிகள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் விலாசம் மற்றும் இவர்களின் உறவினர்களின் விபரங்கள் எல்லாம் திரட்டப்பட்டு வருகின்றன.

இக்காலத்தில் இவ்வாறான சம்பங்களின்போது தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட
இவர்களின் விபரங்களை திரட்டக்கூடியதாக இருக்கின்றது.

சென்ற ஞாயிற்றுக் கிழமை நான் அவுஸ்ரேலியாவில் மெல்பன் நகரில் நின்றபொழுது மூன்று மாதங்களுக்கு முன் ஆலயங்களில் உயிர்நீத்த மக்களுக்காக அங்குள்ள இலங்கை மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட நினைவு திருப்பலியை ஒப்புக்கொடுத்தேன்.

அப்பொழுது அவுஸ்ரேலியாவில் வாழும் எமது மக்கள் மாத்திரமல்ல அங்குள்ள மக்களும் என்ன நடந்தது உலகம் தற்பொழுது அபாயத்தில் இருக்கின்றது என கவலைப்பட்டு தெரிவித்தனர்.

 இவ் நிகழ்வால் இப்பொழுது பெரிய பிரதிப்பலிப்பை உருவாக்கியுள்ளது. இதனால் எமது நாட்டுக்கு பலவிதத்திலும் பெரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

பொருளாதாரம், மக்கள் ஆலயங்கள் செல்லுவதில் மட்டுமல்ல வௌ;வேறு விதத்தில் எமது நாட்டை பாதிப்படைய செய்துள்ளது.
475 ஆண்டுகளுக்கு முன் 600 க்கு மேற்பட்ட கத்தோலிக்கர் தோட்டவெளியாகிய இவ்விடத்தில் கொலை செய்யப்பட்டு இரத்தம் சிந்தி மறைசாட்சியானார்கள்.

அந்தவேளையில் இவர்களின் படுகொலைகளைப்பற்றி மக்கள் தெரிந்து கொள்ள பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற இவ்வாறான சமூக தொடர்பாடல்கள் இருக்கவில்லை.

இப்பொழுது எமது திருச்சபை மறைசாட்சிகளாக இறந்தவர்களை
புனிதர்களாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மன்னார் மற்றும் யாழ் பகுதிகளில் எனக்கு முன் இருந்த ஆயர்கள் 1500 ஆண்டு
காலத்தில் இருந்த திருச்சபையானது அதாவது புனித சவேரியார் உட்பட இயேசு சபையினரும் இவர்களை புனிதர்களாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

இருந்தும் இறைவனின் சித்தம் இன்னும் கைகூடாமல் இருக்கின்றது. இரண்டு
தினங்களுக்கு முன் எனக்கு உரோமாபுரியிலிருந்து ஒரு கடிதம் கிடைக்கப்
பெற்றுள்ளது.

இந்த மறைசாட்சிகளை புனிதராக்குவதற்காக உரோமாபுரியில் செயல்படும் அமலமரி தியாகி சபையைச் சேர்ந்த அருட்தந்தை யோசவ் பொஸ்டர்காத் எனக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தான் புனிதர்களை ஏற்றுக்கொள்ளும்
பேராலயத்துக்குச் சென்றேன். அங்குள்ள இது விடயமான செயலாளர்
தெரிவித்திருப்பதாவது

இந்த மறைசாட்சிகளைப்பற்றிய சான்றுகள் அவசியமாக தேவைப்படுகின்றன என எழுதியுள்ளார்.

அதாவது இந்த மறைசாட்சிகள் பற்றி சரித்திரத்தில் அத்தாட்சிகள் இருக்கின்றனவா என்று.

இதைப்பற்றி எனது சிந்தனைக்கு வருவது சில மாதங்களுக்கு முன் மன்னார் சதொச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவைகள் 16 நூற்றாண்டு காலத்து எலும்புக்கூடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாமும் இங்குள்ள மறைசாட்சிகளின் கல்லறையில் இருக்கும் ஓரிரு எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி இதன் பிhசோதனை மூலம் இது அவர்கள் மரணித்த காலக்கட்டத்தை உறுதிப்படுத்த ஏதுவாகும் என சிந்திக்கின்றேன்.

அத்துடன் இவர்களின் பெயர்களோடு கொண்ட ஆவணங்கள் தகவல்கள் இருக்கின்றதா என வேண்டியுள்ளனர். நாங்கள் எமக்கு கிடைக்கப்பெற்ற பெயர்களை ஏற்கனவே உரோமபுரிக்கு அனுப்பியுள்ளோம். இன்னும் இவ் பெயர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டவட்டமான பெயர்களா என்பதை உறுதிப்படுத்துமாறு
கேட்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களைப்பற்றிய பழைய காலத்து எழுத்துக்கள் இருக்கிறனவா இவ்வாறான தகவல்கள் இருக்கின்றனவா எங்கேயாவது குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் இருக்கின்றனவா என கேட்கப்பட்டுள்ளது.

இறுதியாக இந்த மறைசாட்சிகள் மட்டில் மக்கள் வெளிக்காட்டும் பக்திகள்
கொண்ட வரைபடங்கள் இருக்கின்றனவா அத்துடன் அந்த காலத்தில் இவர்கள்
சம்பந்தமான திருவழிப்பாட்டு ஆவணங்கள் உள்ளனவா என கேட்கப்பட்டுள்ளோம்.

ஆகவே இவர்களை புனிதர்களாக்குவதற்கு எமது ஒவ்வொருவரினம் பங்களிப்புக்கள் அவசியமாகிறது. இதற்காக மறைசாட்சிகளின் அன்னையாக இருக்கும் மரியன்னை வழியாக நாம் தினந்தோறும் செபிப்போம்.

அத்தோடு நான் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஆவணங்களை தேடி கண்டுப்பிடித்து தாருங்கள். அப்பொழுது நாம் உரோமாபுரி பேராலயத்துக்கு அனுப்பிவைத்து புனிதப்பட்டத்திற்காக அவர்களிடம் வேண்டி நிற்கலாம்.

நான் இதற்காக எடுக்கும் முயற்சியானது மிக சிறியதுதான். ஆனால் எனக்கு
முன்பு மன்னார் மறைமாவட்ட ஆயர்களாக இருந்தவர்கள் எடுத்த முயற்சிகள்
அதிகமாக இருப்பதால் எனக்கு ஒரு நம்பிக்கை எமது முயற்சி வெற்றி அளிக்கும் என்று. இவ் வருடம் ஒக்டோபர் மாதம் இறுதி ஞாயிற்றுக் கிழமை மன்னார் மறைமாவட்டம் முழுதும் மறைசாட்சிகளின் நினைவு தினமாக கொண்டாட இருக்கின்றோம்.

இதற்காக எல்லா பங்குகளும் இதன் பக்தியை ஆரம்பிக்க வேண்டும். இதன்பின் நாம் இலங்கை முழுதும் இவ் பக்தியை எடுத்துச் செல்வோம். மன்னார் மறைமாவட்டம் மறைசாட்சிகளின் இரத்தத்தால் கிடைக்கப் பெற்றவை என்பதை எடுத்தியம்புவோம் என இவ்வாறு தெரிவித்தார்.


மன்னாரில் மறைசாட்சிகளை சான்றுபடுத்த அவர்களின் எலும்புகளை அமெரிக்காவுக்கு அனுப்ப முடிவு ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ Reviewed by Author on July 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.