மன்.அரிப்பு றோ.க.த.க பாடசாலை மாணவிகளின் சாதனை-படங்கள்
2019 வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 12 ஆவது தடகள விளையாட்டு போட்டி 18 வயது பெண்கள் பிரிவில் 100 M ஓட்டப்போட்டியில் மன்.அரிப்பு றோ.க.த.க பாடசாலை மாணவி A. Sowmiya Fernando 13செக்கன்களில் ஓடி முடித்து புதிய சாதனையை நிலைநாட்டி உள்ளார்.
அத்துடன் 200 M ஓட்டப்போட்டியில் 27.8 செக்கனில் ஓடிமுடித்து முதல் இடம்பெற்றதுடன் வர்ணச்சாண்றிதழையும் பெற்றுள்ளார். இவர் 18 வயது பெண்கள் பிரிவில் சுவட்டு நிகழ்ச்சியின் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்டுள்ளார்.
அத்தோடு மன்.அரிப்பு றோ.க.த.க பாடசாலை பாடசாலையை சேர்ந்த அபிசா நீளம் பாய்தலில் 1 ம் இடத்தினையும்,
200 M ஓட்டப்போட்டியில் 2 ம் இடத்தினையும்,
400 M ல் 2 ம் இடத்தினையும் பெற்றுள்ளனர் இவர் 18 வயது பெண்கள் பிரிவில் மைதான நிகழ்ச்சியின் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்டுள்ளார்.
இம்மாணவிகளை வாழ்த்துவதோடு பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியை டறினா லெம்பேட் அவர்களையும் இவர்களை ஊக்குவித்த பாடசாலை சமூகத்தையும் மற்றும் முத்தரிப்புத்துறை பழையமாணவர்களையும் நியூமன்னார் இணைய்க்குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டுகின்றோம்.

மன்.அரிப்பு றோ.க.த.க பாடசாலை மாணவிகளின் சாதனை-படங்கள்
Reviewed by Author
on
July 10, 2019
Rating:

No comments:
Post a Comment