இறுதி மூச்சு வரை தனது மகனை தேடியலைந்த தாயின் பரிதாப நிலை -
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவை சேர்ந்த தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார் .
கடந்த 1990ம் ஆண்டு மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை தியாகராஜா என்ற இளைஞரின் தாயாரான வேலுப்பிள்ளை வியாழம்மா என்ற வயோதிப தாயாரே முதுமை காரணமாக மரணமடைந்துள்ளார்.
கடந்த 29 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனின் எந்தவிதமான விபரங்களும் அறியாத நிலையில், தனது மகனுக்கு நீதிகோரி பல்வேறு ஆணைக்குழுக்கள், மனிதவுரிமை அமைப்புக்களில் பதிவுகளை மேற்கொண்டு தனது மகனின் நிலை அறிய தொடர்ந்து போராடி வந்த தாயாரே மரணமடைந்துள்ளார் .
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர் போராட்டம் ஆரம்பமான இதுவரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறவுகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதி மூச்சு வரை தனது மகனை தேடியலைந்த தாயின் பரிதாப நிலை -
Reviewed by Author
on
July 14, 2019
Rating:

No comments:
Post a Comment