பேஸ்பால் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி-மிக பெரிய சாதனை... எனக்கு பெருமையாக உள்ளது! சங்ககாரா
தெற்கு ஆசிய பேஸ்பால் விளையாட்டு தொடர் நடைபெற்று வந்த நிலையில் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரா தனது டுவிட்டர் பக்கத்தில், இது மிக பெரிய சாதனை, அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.
இலங்கையில் இன்னும் பிரபலப்படுத்த வேண்டிய சிறந்த விளையாட்டு பேஸ்பால் என பதிவிட்டுள்ளார்.
பேஸ்பால் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி-மிக பெரிய சாதனை... எனக்கு பெருமையாக உள்ளது! சங்ககாரா
Reviewed by Author
on
July 22, 2019
Rating:

No comments:
Post a Comment