மன்னார்-வவுனியா-யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டிறுதிப்பரீட்சை பழைய பாடத்திட்டம்
தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டிறுதிப்பரீட்சை பழைய பாடத்திட்டம்
தேசிய தொழில்நுட்ப தராதரப்பத்திரம் பழையபாடத்திட்டம் - இறுதிப்பரீட்சை
(குடிசார் எந்திரவியல்/கணிய அளவியல்/ மின் இலத்திரனியல்)
2016ற்கு முன்னார் தமிழ் மொழிமூலம் தொழில்நுட்பக்கல்லூரிகளில் தேசிய தொழில்நுட்ப தராதரப்பத்திரம் பழையபாடத்திட்டம் கற்றவர்களுக்கான இறுதிப்பரீட்சையை விசேடமாக 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்த திணைக்களம் தீர்மானித்துள்ளது.
முன்னைய பரீட்சைகளில் சித்தி பெறாமல் இருப்பவர்களுக்கும் தோற்றது இருப்பவர்களுக்கும் இறுதிச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழ் மொழிமூலம் கற்றவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்து தங்களது சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண தொழில்நுட்பவியல் கல்லூரிகளைத் தொடர்பு கொண்டு பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களைத் தாமதமின்றி சமர்ப்பிக்கவும். மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலரும் இப்பரீட்சையினை எதிர்பார்த்திருப்பதால் இறுதிச் சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.
மன்னார்-வவுனியா-யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டிறுதிப்பரீட்சை பழைய பாடத்திட்டம்
Reviewed by Author
on
July 13, 2019
Rating:
Reviewed by Author
on
July 13, 2019
Rating:


No comments:
Post a Comment