இலங்கை வரலாற்றில் முதன் முதலாக 30 பாடகர்களின் இணைவில் உருவாகியுள்ள பாடல் -
இலங்கை வரலாற்றில் தமிழ் கலைஞர்களுக்காக முதன்முறையாக வரலாற்று பாதையில் தடம் பதிக்கும் சரித்திர பாராட்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய கலாச்சார அமைச்சின் ஏற்பாட்டில் இந்த பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
கொழும்பு - நெலும் பொக்குண (தாமரைத் தடாகம்) அரங்கில் நடைபெறும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் மனோ கணேசன் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான பல்வேறு துறைசார்ந்த தமிழ் கலைஞர்கள் பங்குபற்ற உள்ளதுடன் விருது வழங்கி கௌரவிக்கப்படவும் உள்ளனர்.
குறித்த விசேட நிகழ்வுக்காக கருப்பாடலும் (Theme Song) உருவாக்கப்பட்டுள்ளதுடன், இப்பாடலை இலங்கை வரலாற்றில் முதன் முதலாக 30 பாடகர்கள் இணைந்து பாடியுள்ள நிலையில், இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் தென்னிந்திய தரைப்பட இசையைப்பாளருமான இலங்கை மண் பெற்றெடுத்த கலைஞன் சுருதி பிரபா இதற்கு இசையமைத்தது விசேட அமிசமாகும்.
இலங்கை வரலாற்றில் முதன் முதலாக 30 பாடகர்களின் இணைவில் உருவாகியுள்ள பாடல் -
Reviewed by Author
on
August 31, 2019
Rating:

No comments:
Post a Comment