60 வயது பாட்டி போல மாறிய 10 வயது சிறுமி -
கம்போடியா நாட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் போ ராக்கிங் என்கிற 10 வயது சிறுமி. இவர் பிறக்கும் போதே சுருக்கமான மற்றும் தொய்வான தோல் தோற்றத்துடன் பிறந்துள்ளார்.
இதற்கான காரணம் என்னவென்று அவருடைய பெற்றோருக்கு தெரியவில்லை. உள்ளூரை சேர்ந்த துறவிகள் அவர் முன் பிறவியில் செய்த ஒரு பாவத்தின் காரணமாகவே இந்த தோற்றத்தினை பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.

முகத்தில் வயதானவரை போல இருந்தாலும், போ இன்னும் ஒரு குழந்தையின் உடலமைப்பைக் கொண்டிருக்கிறார். அவரது சகோதரர் சே (11) மற்றும் வயது ஒத்த சிறுவர்களின் அதே உயரத்தில் இருக்கிறார்.
போ இதுவரை எந்த ஒரு மருத்துவர்களின் ஆலோசனையையும் பெறவில்லை. ஆனால் தற்போது முகமாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ள ஆசைப்படுகிறார்.

இதுகுறித்து பேசிய போ, உடன் பிறப்புகள் முதற்கொண்டு அனைவரும் என்னுடைய முகத்தை கேலி செய்கின்றனர். என்னை யாரும் சகோதரி என்று அழைப்பதில்லை, அதற்கு மாறாக பாட்டி என்று அழைக்கிறார்கள்.
எனக்கும் அழகான முகம் தேவைப்படுகிறது. மற்ற அனைவருமே நல்ல முகத்துடன் இளமையாக இருக்கின்றனர். ஆனால் நான் மட்டும் தான் இப்படி வயதான முகத்துடன் இருக்கிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

60 வயது பாட்டி போல மாறிய 10 வயது சிறுமி -
Reviewed by Author
on
August 13, 2019
Rating:
No comments:
Post a Comment