தங்கையின் கருமுட்டை,தாயின் கர்ப்பப்பை: ஒரு அபூர்வ குழந்தையை பெற்ற வித்தியாசமான தம்பதி!
Cecile Eledgeஇன் ஓரினச்சேர்க்கையாளரான மகன் Matthew (32) செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தபோது, அவருக்கு வாடகைத்தாயாக இருக்க முடிவு செய்தார் 61 வயதான Cecile.
Matthewவின் துணைவரான Elliot Dougherty (29)இன் தங்கை Lea Yribe (26) தனது கருமுட்டை ஒன்றை தர முன்வந்தார்.
ஒருவரின் தங்கையின் கருமுட்டை, மற்றவரின் தாயின் கர்ப்பப்பை என வித்தியாசமாக ஒரு குழந்தையை பெற்றுள்ளது இந்த வித்தியாசமான ஜோடி. இதற்கிடையில் 30 ஆண்டுகளுக்கு முன் தனது பிள்ளைகளை பெற்றெடுத்து, 10 ஆண்டுகளுக்குமுன் மெனோபாஸ் ஆன நிலையில், தான் மீண்டும் தாயாவதை மனப்பூர்வமாக விரும்புவதாக தம்பதிக்கு உறுதியளித்துள்ளார் Cecile.
பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குப்பின் Cecileயின் உடல் 40 வயது பெண் ஒருவரின் உடல் போல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்க, முதல் முயற்சியிலேயே கருவுற்றார் அவர்.
மார்ச் மாதம் 25ஆம் திகதி தனது சொந்த பேத்தியை பெற்றெடுத்தார் Cecile. அதுவும் 61 வயதில், சாதாரண முறையில் (Normal Delivery) அவர், ஐந்து பவுண்டுகள் 13 அவுன்ஸ் எடையுள்ள அந்த குழந்தையை பெற்றெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கையின் கருமுட்டை,தாயின் கர்ப்பப்பை: ஒரு அபூர்வ குழந்தையை பெற்ற வித்தியாசமான தம்பதி!
Reviewed by Author
on
August 14, 2019
Rating:

No comments:
Post a Comment