விக்னேஸ்வரன் தரப்பால் நடத்தப்படும் எழுக தமிழ் பேரணியால் என்ன பயன்? -
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழா் விடுதலை கூட்டணியின் தலைவா் வி.ஆனந்தசங்கரி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தமிழா் விடுதலை கூட்டணியின் யாழ்.அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
வட மாகாண சபை ஆட்சியில் இருந்த போது அதில் அங்கம் வகித்த அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த நிர்வாகத்திலேயே இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
அப்படியானால் முதலில் அவர் தனது பதவியிலிருந்து விலகி நீதியான விசாரணைக்கு இடமளித்திருக்க வேண்டும். விசாரணைக்கு பதவியில் இருந்து ஒதுங்கி ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருப்பார்.
வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் செய்த தவறினால் இப்போது நீதிமன்றத்தின் ஊடாக அவரது நிர்வாக பிழைகள் வெளியில் வந்துள்ளன. இவற்றை செய்யாமல் விட்டுவிட்டு தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க போகின்றோம் என
எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. இவர்களின் பேரணியால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்றார்.
விக்னேஸ்வரன் தரப்பால் நடத்தப்படும் எழுக தமிழ் பேரணியால் என்ன பயன்? -
Reviewed by Author
on
August 19, 2019
Rating:

No comments:
Post a Comment