இலங்கை இளைஞர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! அமெரிக்கா, ஜேர்மன் செல்ல இலவச வாய்ப்பு -
இலங்கை வாழ் இளைஞர்களுக்கு அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில் பயிற்சி பெற்ற ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உயர் தொழிற்பயிற்சியின் கீழ் இவர்களை வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காக அனுப்பி வைக்கும் கொள்கை மட்டத்திலான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பான், கொரியா, அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகளில் வேலை செய்வதற்கான கூடுதலான கேள்வி காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் வெளிநாடு செல்லும் ஊழியர்களுக்காக பல பயிற்சி மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ரன் பியாபத் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
வெளிநாடு செல்லும் ஊழியர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சிக்கு வழிகாட்டுதல், சுயதொழில், காப்புறுதி வசதி உள்ளிட்ட பல விசேட வசதிகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.
பத்து வருடத்தை இலக்காகக் கொண்டு ஜப்பானுக்கான தொழில்வாய்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இளைஞர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! அமெரிக்கா, ஜேர்மன் செல்ல இலவச வாய்ப்பு -
Reviewed by Author
on
August 09, 2019
Rating:

No comments:
Post a Comment