ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு! வெளியானது தகவல் -
தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதொரு விடிவைத் தருவதாக, எழுத்து மூலம் எந்தக் கட்சி ஆதரவு தெரிவிக்கின்றதோ, அதற்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்.
இவ்வாறு கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போதைய அரசியலிலே ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துக்கொண்டிருக்கின்றது. யாரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது.
பலர் நியமித்தும் இருக்கின்றனர். அத்துடன், வேட்பாளர்களை நியமிப்பதில் இழுபறி நடந்துகொண்டிருக்கின்றது. எனினும், அவர்களுடய கட்சி இழுபறிக்குள் நாங்கள் தலயீடு செய்யப் போவதில்லை.
எந்தக் கட்சி தமிழ் மக்களின் விடிவிற்காக சரியான முறையிலே, தமிழினம் சுயநிர்ணய உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழ்வதற்குரிய ஆயத்தமாக இருக்கின்ற இந்தச் சூழலை தொடர்ந்து கொண்டு நடத்தி, ஒரு விடிவினை நிரந்தரமாகத் தருவதற்கு எந்தக் கட்சி எழுத்துமூலமாக நிச்சயத்தினைத் தெரிவிக்கின்றதோ அதற்கே எமது கட்சி ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருக்கின்றது” என கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு! வெளியானது தகவல் -
Reviewed by Author
on
August 28, 2019
Rating:

No comments:
Post a Comment