அண்மைய செய்திகள்

recent
-

பேசாலையில் நிராகரிக்கப்பட்ட துறைமுகத்தை வங்காலை அல்லது சிலாபத்துறையில் பகுதி மீனவ சமூகம் ஒத்துழைத்தால் நிர்மானிக்கப்படும். அமைச்சர் ஹரிசன்....படம்

ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டத்தின் கீழ் பேசாலையில் நிர்மானிக்க
மேற்கொள்ளப்பட்ட திட்டமானது அப் பகுதி மீனவ சமூகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால்  இவ் திட்டத்தை வங்காலை அல்லது சிலாபத்துறையில் நிர்மானிக்க அப் பகுதி மீனவ சமூகம் ஒத்துழைக்குமாகில்
இவ் துறைமுகம் அங்கு நிர்மானிக்கப்படும் என  விவசாய நீர்பாசனக் கிராமிய
பொருளாதார அலுவல்கள் மீனிபிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் உயிலங்குளத்தில் 11.7 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட
கமநல சேவைகள் நிலையம் திங்கள் கிழமை (26.08.2019) திறந்து வைக்கப்பட்டபோது இதல் பிரதம அதிதியாக கலந்து கொண்ட விவசாய நீர்பாசனக் கிராமிய பொருளாதார அலுவல்கள் மீனிபிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தொடர்ந்து பேசுகையில்

11.7 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை அமைச்சர் றிஷhட்டின் வேண்டுகோளின் பேரில் இன்று (திங்கள்கிழமை) திறந்து வைக்கப்படுகின்றது.

இதேபோன்று முசலி பிரதேச செயலகப் பிரிவில் மறிச்சுக்கட்டி பகுதியில் கமநல சேவைகள் நிலையம் ஒன்றை உத்தியோகபூர்வமாக திறந்து மக்கள் கையில் ஒப்படைத்து வந்திருக்கின்றோம்.

இவ்வாறு இதே பிரதேச செயலகப் பிரிவில் சிலாபத்துறை பகுதியில் அமைச்சர் றிஷாட்டின் வேண்டுகோளுக்கிணங்க நாங்கள் நிதி ஒதக்கீடு செய்து தற்பொழுது அரை திட்ட வேலைகள் நிறைவடைந்த நிலையில் இருக்கும் இவ்வாறான கட்டிடம் ஒன்றை பூர்த்தி செய்து கொடுக்க இருக்கின்றோம்.

இதை நிறைவு செய்வதற்காக இன்று ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளோம். வடக்கு கிழக்கு தெற்கு என்று பாராது அனைத்து விவசாயிகளும் பலன் அடைய வேண்டும் என்ற நோக்குடன் இன்று (திங்கள் கிழமை) உயிலங்குளம் பிரதேசத்தில் கமநல சேவைகள் நிலையம் சகல வசதிகளுடன் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மறிச்சுக்கட்டி பகுதியில் நீர் வசதி செய்து கொடுத்ததுபோன்று உயிலங்குளம்
பகுதிக்கும் உடனடியாக குழாய் கிணறு அமைக்கப்பட்டு உங்களுக்கும் நீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எதிர்நோக்குவது இவ்வாறான அலுவலகங்களில் உத்தியோகத்தர்
பற்றாக்குறை. இவற்றை நாங்கள் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். வடக்கு கிழக்கு மாகாணங்களிலே நிலவி வருகின்ற இவ் உத்தியோகத்தர் பற்றாக் குறைகளை நிவர்த்தி செய்வதன் தொடர்பாக நாங்கள் கலந்து ஆலோசித்திருக்கின்றோம். இதற்கான வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

இவ் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்போது மன்னார் மாவட்டத்துக்கான தேவைகளை மன்னார் மாட்டத்திலும் வவுனியா மாவட்டத்துக்குரியதை வவுனியா மாவட்டத்திலும் இவ்வாறு யாழ், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்குரியதை அந்தந்த மாவட்டங்களிலிருந்தே உத்தியோகத்தர்களை தெரிவு செய்து நிவர்த்தி செய்வோம்.

நான் பெயர் சொல்ல விரும்பாவிட்டாலும் சொல்லுகின்றேன் எஸ்.பி.திஸ்ஸநாயக்கா என்ன செய்தார் மன்னாருக்கு வடக்கு கிழக்குக்கு  தேவையான உத்தியோகத்தர்களை கண்டி கேகாலை போன்ற இடங்களில் நியமித்து நிரப்பியதை காணுகின்றோம்.

அவர்கள் அவ்வாறு நியமிக்கப்பட்டபோதும் இவர்கள் இப்பகுதிகளில் சேவை செய்ய முடியாது போய்விட்டது. ஒன்று இவர்களுக்கு பாiஷ புரியாது இருந்தது. அத்துடன் இவர்களுக்கு இங்குள்ள சுற்றுச் சூழல் பொருத்தமாக இருக்கவில்லை. இவ்வாறு சமூர்த்தி திட்டத்திலும் இவ்வாறான வேலைகளை செய்தார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார் கிளிநொச்சியில் சிங்கள உத்தியோகத்தர் ஒருவர் மாற்றம் கேட்டு நிற்கின்றார் என்று. நான் உறுதியாக தெரிவிக்கின்றேன் வடக்கு கிழக்குக்கு தேவையான
உத்தியோகத்தர்களை இவ் மாகாணங்களுக்கு வெளியே இருந்து தெரிவு செய்ய மாட்டோம்.

நான் அமைச்சரவையில் இவ்வாறான தேவைகளை முன்வைக்கும்போது அமைச்சரவையில் இருக்கும் றிஷாட்டிடம் இப் பகுதியில் இருக்கும் தேவைகளை கேட்டுத்தான் எனது பத்திரத்தை அமைச்சரவையில் முன்வைக்கின்றேன்.

நான் இவ்வாறு செய்யாவிடின் உங்களுக்கு ஒரு அசாதாரண நிலை ஏற்படும் என நான் நினைக்கின்றேன். இங்கு படித்து வேலையற்ற பிள்ளைகளுக்கு நான் அநியாயம் செய்பவனாக இருப்பேன் என உணர்கின்றேன்.

எதிர்வரும் ஐனவரி மாதத்துக்குள் இங்குள்ள உத்தியோகத்தர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வேன். வுpவசாயிகன் இங்கு எப்பொழுதும் கஷ்டப்பட்டவர்களாக இருப்பதை அறிகின்றேன்.

இதற்கு காரணம் விவசாயிகளுக்கு கிடைக்கப் பெறுகின்ற வருமானம் போதாமையேகாரணமாகும். இங்கு இரண்டு முறை செய்ய வேண்டிய விவசாயத்தை ஒரு முறையே செய்கின்றோம். தண்ணீர் இல்லாத பிரச்சனையே இதற்கு காரணமாகும்.

இவ்விரண்டுக்கும் ஒரு தீர்வை பெறவே நாங்கள் முயற்சி செய்கின்றோம்.
நாங்கள் அருவியாற்றை மறித்து பெரியதொரு நீர்பாசனத் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

இவ் திட்டம் பூர்த்தி அடையும்போது மன்னார் மாவட்டத்தில் வருடத்தில் இரண்டு முறை விவசாயம் செய்யும் நிலை ஏற்படும்.

நாம் சுதந்திரம் பெற்ற பின்பு பெருந் தொகையான விளைச்சலை பெறமுடியாது இருக்கின்றோம். நாம் ஒரு ஏக்கருக்கு 200 புசலுக்கு குறைவான விளைச்சலையே பெற்று வருகின்றோம்.

யப்பான் நாட்டிலே ஒரு ஏக்கருக்கு 400 புசல் நெல்லை விளைச்சலாக பெறுகின்றனர். தாய்லாந்தில் 350 தொடக்கம் 400 புசல் நெல்லை உற்பத்தி செய்கின்றார்கள். வியட்நாமிலும் இவ்வாறே. பாக்கிஸ்தானில் எங்களைவிட கூடுதலான விளைச்சலைப் பெறுகின்றனர். இவ்வாறு இந்தியாவிலும் கூட ஆனால் நாங்கள் இந்த இலக்கை அடைய முடியாது தவிக்கின்றோம். எமக்கு
இருக்கின்ற பெரிய சவால் என்னவென்றால் மிக குறைந்த நீரிலும் மிக குறைந்த நெல்லிலும் நாம் அதிகபடியான உற்பத்தியை அதிகரிப்பது.

நாம் ஒரு ஏக்கரில் 350 புசல் நெல்லை உற்பத்தி செய்வோமாகில் வருடத்தில்
இரண்டு போகத்தில் நாம் 700 புசல் நெல்லை உற்பத்தி செய்ய முடியும்.

இதைவிட நாம் இரண்டுக்கும் நடுவே மேலும் ஒரு போக நெற் செய்கையை செய்வோமாகில் மேலும் 350 புசல் நெல்லை உற்பத்தி செய்யக் கூடியதாக இருக்கும். இவ்வாறு இருக்குமாகில் விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும். இடைபோக காலத்தில் நாம் மேட்டுநில செய்கையை கூட செய்ய முடியும்.

மன்னார், வவனியா, மதவாச்சி போன்ற இடங்களில் அதிகமாக உளுந்து உற்பத்தி செய்கின்றார்கள். இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்பற்காக நாங்கள் இதற்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளோம். விவசாயிகள் பயப்பட வேண்டாம். நாங்கள் இறக்குமதி வரியை குறைக்க மாட்டோம். நீங்கள் பயப்படாது உளுந்து உற்பத்தியில் ஈடுபடுங்கள். யாழ்ப்பாணத்தில் அதிகளவான கிழங்கு வகைகளை உற்பத்தி செய்கின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் காலங்களில் நாங்கள் இதன் இறக்குமதி வரியை குறைக்க மாட்டோம்.

நாங்கள் பெப்ரவரி மாதத்தில் கிழங்கு இறக்குமதிக்கு 20 ரூபா தொடக்கம் 50
ரூபா வரை வரியை அதிகரிக்கின்றோம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ கிழங்கு 80 ரூபா வரை பெறுகின்றனர்.

இதனால் கிழங்கு உற்பத்தி செய்பவர்களுக்கு நஷ;டம் ஏற்படாது இருக்கின்றது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சின்ன வெங்காயத்துக்கு நாங்கள் 25 ரூபாவாக வரியை அதிகரித்துள்ளோம். இதனால் உள்ளுர் உற்பத்திக்கு நல்ல விலை கிடைக்கப்பெற்று வருகின்றது. நாங்கள் வெளி நாட்டிலிருந்து பயறுகளை இறக்குமதி செய்வதை குறைத்துள்ளோம்.
இதனால் உள்ளுர் உற்பத்திக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

2000 ஹெக்டருக்கு மேற்பட்ட நிலத்தில் கடலை உற்பத்திக்காக கிளிநொச்சி
யாழ்ப்பாண பகுதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் நிலக்கடலை இறக்குமதி செய்வதை முற்றாக நாங்கள் தடை செய்துள்ளோம்.

கடலை உற்பத்தி செய்வோருக்கு நாங்கள் உதவிகளும் செய்து வருகின்றோம்.
நாங்கள் திட்டமிட்டு விவசாயத்தை செய்வோமாகில் நாம் வெளிநாடுகளுக்கு
அனுப்புகின்ற பணத்தை தடுக்க முடியும்.

நான் ஒரு விவசாய அமைச்சராக இருக்கின்ற காலத்திலே இவற்றை சரியாக செய்வேன். நான் குறிப்பாக உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

56 நாட்கள் அரசியல் பிரச்சனை ஏற்பட்டபொழுது உங்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக  அமைச்சர் றிஷாட்அதிகளவான பங்களிப்பு செலுத்தி எமது அரசை காப்பாற்றினர்.

முஸ்லீம் கட்சிகள் வேறு வேறாக இருந்தபோதும் அமைச்சர் றிஷhட் அவர்களின் கட்சி ஒரே குரலில் இருந்தார்கள். இவர்கள் அமைச்சுக்கோ அல்லது பணத்துக்கோ சோரம் போகாது ஐனநாயகத்துக்காக நேர்மையுடன் செயல்பட்டார்கள்.

இலங்கை ஐனநாயகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அமைச்சர் றிஷாட்டின் கட்சி, இவ்வாறு றவூப் அவர்களின் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அமைச்சர் மனோ கணேசனின் கட்சி இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டமையால் இன்று ஐனநாயகத்தை பாதுகாக்கக் கூடியதாக இருந்தது.

இவர்கள் உருவாக்கி தந்த இந்த ஐனநாயகத்தை மீண்டும் சக்தியுள்ளதாக்க
வேண்டிய தேவை இருக்கின்றது. அப்பொழுதான் நாம் இந்த நாட்டை அமைதி
பூங்காவாக மாற்ற முடியும். நாம் எல்லோரும் ஒரே இன மக்கள் என்ற நோக்கம் கொண்டே பிரதமர் வடக்கு
கிழக்கு அபிவிருத்திக்கென பெருந் தொகையான நிதிகளை ஒதுக்கியுள்ளார்.

மயிலிட்டியை அபிவிருத்தி செய்து நாங்கள் மக்களிடம் கையளித்துள்ளோம்.
பேசாலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியூடாக ஒரு துறைமுகத்தை நிர்மானிக்க முயற்சி செய்தோம்.

ஆனால் இதை நிர்மானிக்க பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை இங்கு நிர்மானிக்க முடியாது போனால் அமைச்சர் றிசாட்டின் வேண்டுகோளுக்கிணங்க வங்காலையில் அல்லது சிலாபத்துறையில் நிர்மானிக்க அப் பகுதி மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அது நல்ல முடிவாக வருகின்றபொழுது இவ் துறைமுகம்
அங்கு நிர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பேசாலையில் நிராகரிக்கப்பட்ட துறைமுகத்தை வங்காலை அல்லது சிலாபத்துறையில் பகுதி மீனவ சமூகம் ஒத்துழைத்தால் நிர்மானிக்கப்படும். அமைச்சர் ஹரிசன்....படம் Reviewed by Author on August 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.