நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்கள் உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றதாம்!
இதற்காக பலர் பல வாசனைத்திரவியங்களை பாவிப்பதுண்டு. அந்த 24 மணித்தியாலம் புத்துணர்ச்சியை தராது.
வியர்வை மட்டுமின்றி நாம் சாப்பிடும் உணவுகளும் நமது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
அதுமட்டுமின்றி சில உணவுகள் வாசனை திரவியங்கள் உபயோகித்தாலும் அவற்றின் துர்நாற்றத்தை குறைக்க முடியாது.
அந்தவகையில் உங்கள் உடலில் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க எந்த எந்த உணவுகளை சாப்பிட கூடாது என தற்போது இங்கு பார்ப்போம்.
- இறைச்சி செரிக்க அதிக நேரம் தேவைப்படும், இது குடலில் சில நச்சுக்களை விடுவிக்கிறது. இது வெளியிடும் பாக்டீரியா அதிக வியர்வையை ஏற்படுத்தக்கூடும். இப்படி வியர்க்கும்போது மோசமான துர்நாற்றம் ஏற்படும்.
- பூண்டு பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து வியர்க்கும் போது மோசமான துர்நாற்றத்தை வெளியிடும். மேலும் இது பேசும்போதும் மோசமான வாசனையை உண்டாக்கும்.
- தொடர்ச்சியாக மீன் சாப்பிடுபவர்களுக்கு எப்பொழுதும் உடலில் ஒருவித துர்நாற்றம் இருக்கிறது. அதற்கு காரணம் அதிலுள்ள டிரிமெதிலமைன் தான். உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும். இது மோசமான துர்நாற்றத்தை உண்டாக்கும்.
- முட்டைகோஸ், காலிப்ளவர், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் சல்பர் அதிகளவு உள்ளது. ப்ரெஸ்ஸிகா குடும்பத்தை சேர்ந்த அனைத்து காய்கறிகளுமே துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாகும்.
- காபி குடித்தவுடன் வாய் மிகவும் உலர்ந்து விடுகிறது. இதனால் உங்கள் வாயில் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனால் பேசும்போதும் வியர்வை வரும்போதும் துர்நாற்றம் ஏற்படும்.
- அஸ்பாரகஸ் சாப்பிடும்போது உங்கள் உடல் சல்ப்யூரிக் அமிலத்தை வெளியிடுகிறது. இதிலுள்ள மெர்காப்டன் உங்கள் உடலில் மோசமான வாசனையை உருவாகக்கூடும்.
- அல்கஹால் அருந்தும்போது அசிட்டிக் அமிலம் உருவாகிறது. இது வியர்வை மற்றும் பேசும்போது துர்நாற்றத்தை உருவாக்கும்.
- கார்போஹைட்ரேட் குறையும்போது உடல் கீட்டோன் என்னும் நச்சுப்பொருளை வெளியிடுகிறது. இதனால் உடலிலதுர்நாற்றம் வெளிப்படும்.
நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்கள் உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றதாம்!
Reviewed by Author
on
August 09, 2019
Rating:
Reviewed by Author
on
August 09, 2019
Rating:


No comments:
Post a Comment