மன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்-
மன்னார் நகர சபைக்குற்பட்ட எழுத்தூர் பகுதியில் காணப்படும் குளத்தை ஆழப்படுத்தப்படும் நடவடிக்கைகளில் மன்னார் நகர சபை ஈடுபட்டுள்ளது.
-மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர் நிலைகள் வற்றிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில் மன்னார் நகர சபைக்குற்பட்ட மக்களின் பயண்பாட்டில் காணப்பட்ட குறித்த குளமும் முழுமையாக வற்றியுள்ளது.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனின் பணிப்புரைக்கு அமைவாக நகர சபை உறுப்பினர் மனோ ஐங்கர சர்மா அவர்களின் தலைமையில் குறித்த குளம் அகலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்படும் வருகின்றது.
குறித்த குளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் மண் மன்னார் நகர சபைக்குற்பட்ட சேதமடைந்த வீதிகள் புணரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்-
Reviewed by Author
on
August 19, 2019
Rating:

No comments:
Post a Comment