இந்தியராக இருப்பதில் பெருமை.. தங்கம் வென்று திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு!
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சுவிட்சர்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
ஜப்பான் வீராங்கனை நஜோமி ஓகுஹராவை இறுதிப்போட்டியில் எதிர்கொண்ட சிந்து, 38 நிமிடங்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அவருக்கு இந்திய தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு திரும்பிய சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்த சிந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன், வாழ்த்திய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும் கடினமாக விளையாடி பல பதக்கங்களை குவிப்பேன்.
மிகவும் எதிர்பார்த்த வெற்றி இருமுறை தவறியது, ஆனால் இறுதியில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். இது எனக்கு சிறந்த தருணம். இந்தியராக இருப்பதில் நான் மிகவும் பெருமைபடுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இந்தியராக இருப்பதில் பெருமை.. தங்கம் வென்று திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு!
Reviewed by Author
on
August 27, 2019
Rating:

No comments:
Post a Comment