கோத்தபாய - மகிந்த போன்றவர்கள் யார்? அறிவிப்பின் பின் முதல் எச்சரிக்கை - T
தென்னிலங்கையில் இருந்து வரும் தலைவர்களைப் பொறுத்தவரை அவர்கள் அடிப்படைவாத சிந்தனையில் மூழ்கியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மகிந்த அணி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முதல் முறையாக ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,
தென்னிலங்கையில் இருந்து வரும் தலைவர்கள் பேரினவாத பிடிக்குள் இறுகியுள்ளனர். பேரினவாதத்தை மட்டும் கையில் வைத்து ஆட்சி செய்பவர்கள் அப்படி இல்லாமல் முற்போக்கு சிந்தனையுடன் உள்ளனர்.
அவர்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இதனால், அறவழி போராட்டங்களும், ஆயுத போராட்டங்களும் நடைபெற்றன.
அவற்றின் தீர்வை போரினால் மட்டும் காண முடியாது. மாறாக ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை மூலமாக நிரந்தரமான அரசியல் தீர்வை காண்பதன் மூலமாகத் தான் தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்ற சிந்தனை வரவேண்டும்.
தற்போது தெருவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்னும் கண்ணீருடன் நிற்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் கூறும் பொறுப்பு அவருக்குண்டு.
இந்த தேசிய இனப் பிரச்சினையை தீர்க்கக் கூடிய சக்தி, ஆளுமை வலுமிக்க தலைவர்களாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றியடைவோம் என்று கொக்கரிப்போரை பார்க்கும் போது சிறுபான்மையினர் வெட்கமடைகின்றனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பொறுத்தவரையில் ஒரு பல்லின மக்களை நிர்வகிப்பதற்கான தகுதி அவரிடம் உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தீயவைகளுக்கு அவரும் ஒரு காரணம் என்பது தமிழ் மக்கள் மத்தியிலும் நடுநிலை சிந்தனையாளர்கள் மத்தியிலும் பேசப்படுகிறது.
இவ்வாறு பல தீயவைகளை செய்த அவர் இந்த தேசியப் பிரச்சினைகளை பத்தோடு ஒன்று பதினொன்றாக தட்டிவிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய - மகிந்த போன்றவர்கள் யார்? அறிவிப்பின் பின் முதல் எச்சரிக்கை - T
Reviewed by Author
on
August 12, 2019
Rating:

No comments:
Post a Comment