மன்னார்-வன்முறையற்ற தொடர்பாடல் தொடர்பாண விழிப்புணர்வு கருத்தமர்வு...
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டதில் தெரிவு செய்யப்பட்டு செயற்பட்டு கொண்டிருக்கும் ஊடக உப குழு உள்ளூர் அரசியல் வாதிகள் இளையோர்குழு சர்வமத குழு மாற்றுத்திறனாளிகளுக்கான குழு பெண்கள் குழு ஆகிய குழுக்களுக்கான வன்முறையற்ற தொடர்பாடல் தொடர்பான இரண்டு நாள் பயிற்சிபட்டறையானது நேற்று 08-08-2019 தொடக்கம் இன்று 09-08-2019 வரை மன்னார் ஆகாஸ் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
குறித்த பயிற்சிபட்டறையில் இன மத ரீதியான முரண்பாடுகளை வன்முறையற்ற தொடர்பாடல் மூலம் சீர் செய்வது தொடர்பாகவும் மொழி சார் உணர்வு சார் விடயங்களினால் இனங்கள் மதங்கள் மத்தியில் பிரிவிணை ஏற்படாது பாதுகாப்பது தொடர்பாகவும் வன்முறையற்ற தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின்(CC விரிவுரையாளர்களான திரு.ஜோண்சன் மற்றும் திருமதி.ரமனுஷா மூலமாக விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் மும்மத தலைவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் மாற்றுத்திறனாளிகள் இளையோர் யுவதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார்-வன்முறையற்ற தொடர்பாடல் தொடர்பாண விழிப்புணர்வு கருத்தமர்வு...
Reviewed by Author
on
August 09, 2019
Rating:

No comments:
Post a Comment