மன்னாரில் செல்வம் அடைக்கலநாதன்MP மற்றும் கட்சியின் மாவட்ட உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு-
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நேற்று ஞாயிற்றுகிழமை 11.08.2019காலை 11 மணியளவில் மன்னார் ரெலோ அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
குறித்த ஒன்றுகூடலில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும் மன்னார் பிரதேசசபை உறுப்பினருமான ஏ.ரி. மோகன்ராஜ் , துணை அமைப்பாளர் வினோ, மன்னார் நகரமுதல்வர் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபை உபதவிசாளர் லூர்துநாயகம், மன்னார் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிறேம் குமார் உட்பட மன்னார் நகரசபை , மன்னார் , மாந்தை, நானாட்டான், முசலி பிரதேசசபைகளின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச இளைஞரணி செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றதேர்தலில் போட்டியிட்ட அபேட்சகர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் தற்போதைய செயற்பாடுகள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பல்வேறுபட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் நடைபெறும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பான மீளாய்வு செய்யப்பட்டதோடு, எதிர் கால செயற்பாடுகள் அரசியல் நகர்வுகள் பற்றிய ஆலோசனைகளும் திட்டமிடலும் இடம்பெற்றது.
இதன் போது சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. மேலும் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களின் அபிவிருத்தி தேவைகளை ஆராய்ந்து சீரான அபிவிருத்தி வேலையை முன்னெடுக்க மாவட்ட அமைப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் 11 பேர்கள் கொண்ட திட்டமிடல் அபிவிருத்தி குழு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஒன்றுகூடலில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும் மன்னார் பிரதேசசபை உறுப்பினருமான ஏ.ரி. மோகன்ராஜ் , துணை அமைப்பாளர் வினோ, மன்னார் நகரமுதல்வர் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபை உபதவிசாளர் லூர்துநாயகம், மன்னார் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிறேம் குமார் உட்பட மன்னார் நகரசபை , மன்னார் , மாந்தை, நானாட்டான், முசலி பிரதேசசபைகளின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச இளைஞரணி செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றதேர்தலில் போட்டியிட்ட அபேட்சகர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் தற்போதைய செயற்பாடுகள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பல்வேறுபட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் நடைபெறும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பான மீளாய்வு செய்யப்பட்டதோடு, எதிர் கால செயற்பாடுகள் அரசியல் நகர்வுகள் பற்றிய ஆலோசனைகளும் திட்டமிடலும் இடம்பெற்றது.
இதன் போது சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. மேலும் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களின் அபிவிருத்தி தேவைகளை ஆராய்ந்து சீரான அபிவிருத்தி வேலையை முன்னெடுக்க மாவட்ட அமைப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் 11 பேர்கள் கொண்ட திட்டமிடல் அபிவிருத்தி குழு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் செல்வம் அடைக்கலநாதன்MP மற்றும் கட்சியின் மாவட்ட உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு-
Reviewed by Author
on
August 12, 2019
Rating:

No comments:
Post a Comment