காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி நியமனம் -
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 400 தொகுதிகளில் படுதோல்வியை தழுவியது.
இதையடுத்து, மே மாதம் 25 ஆம் திகதி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
தனக்கு பதில் புதிய தலைவரை தெரிவு செய்து கொள்ளும்படி அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதை ஏற்கவில்லை.
அவரை சமரசம் செய்து வந்தனர். ஆனாலும் ராஜினாமாவை திரும்பப்பெற ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதனால் கடந்த 77 நாட்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இல்லாமல் தடுமாற்றத்துடன் செயல்பட்டு வந்தது.
134 ஆண்டுகள் பாரம்பரிய சிறப்பு கொண்ட காங்கிரஸ் கட்சி இதுவரை இத்தகைய பரிதாப சோதனையை சந்தித்தது இல்லை.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் 65 பேர் மற்றும் மாநில தலைவர்கள், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மன்மோகன் சிங் தலைமையிலான 5 குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநில முதல் அமைச்சர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தேசிய தலைவராக சோனியா காந்தி தெரிவு செய்யப்பட்டு உள்ளார் என மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி நியமனம் -
Reviewed by Author
on
August 12, 2019
Rating:

No comments:
Post a Comment