மன்னாரில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஸ்கரிப்பு-PHOTOS
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் இன்று வியாழக்கிழமை (22) ஈடுபட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை (22) காலை 8 மணிக்கு ஆரம்பமான குறித்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் நாளை வெள்ளிக்கிழமை (23) காலை 8 மணி வரை இடம் பெறும்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மன்னாரில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வைத்தியசாலையின் வெளி நோயளர் பிரிவுகளில் எவ்வித பணிகளும் இடம் பெறவில்லை.
தூர இடங்களில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த மக்கள்பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனினும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் வழமை போல் இடம் பெற்று வருகின்றது.சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வருவோர் அவசர தேவை கருதி நோயாளர் விடுதிகளில் தங்க வைத்து சிகிச்சை வழங்கப்படுகின்றது.
அரச வைத்திய சாலைகளில் நிலவும் பாரிய மருந்து தட்டுப்பாடு மற்றும் தரம் குறைந்த மருந்துகள் வழங்கப்படுகின்றமை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரியும்,
கல்வி பொது உயர் தராதரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி பெறாத சிலரை வைத்தியர்களாக நியமித்து நோயாளர்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளும் அமைச்சரின் சதி முயற்சிகளுக்கு எதிராகவும் , மற்றும் மேலும் சில காரணங்களை முன் நிறுத்தியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு முழுவதிலும் குறித்த பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஸ்கரிப்பு-PHOTOS
Reviewed by NEWMANNAR
on
August 22, 2019
Rating:

No comments:
Post a Comment