அண்மைய செய்திகள்

recent
-

விசேட தேவையுடையவர்களுக்கு உதவ தயாராகும் ரோபோக்கள் -


உலக அளவில் நவீன தொழில்நுட்பப் புரட்சிக்கு பெயர் பெற்ற நாடாக ஜப்பான் விளங்குகின்றது.

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிலேயே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அடுத்த ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் இப் போட்டியிலும் பல தொழில்நுட்ப புரட்சிகளால் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்க காத்திருக்கின்றது ஜப்பான்.
அதுமாத்திரமன்றி இப் போட்டிகளின்போது விசேட தேவையுடையவர்களுக்கு உதவுவதற்காக ரோபோக்களை பயன்படுத்தவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ரோபோக்களை ஜப்பானின் பிரபல கார் வடிவமைப்பு நிறுவனமான டொயோட்டா வடிவமைத்துவருகின்றது.
அத்துடன் பார்வையாளர்களை வரவேற்பதற்காக Miraitowa மற்றும் Someity எனப் பெயரிடப்பட்டுள்ள இரு ரோபோக்களும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேட தேவையுடையவர்களுக்கு உதவ தயாராகும் ரோபோக்கள் - Reviewed by Author on August 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.