உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரமாக மீண்டும் தெரிவான லண்டன்: பட்டியல் இதோ!
நகரத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு, வேலைவாய்ப்பு, விரும்பக் கூடியது, மலிவானது மற்றும் தரமான வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தெரிவு செய்யப்படுகின்றது.
இந்த தரவரிசையின் அடிப்படையில் உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரமாக லண்டன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகளை சேர்ந்த தலா 14 நகரங்கள் தெரிவாகியுள்ளது.
கனடாவை பொறுத்தமட்டில் மொன்றியல் நகரம் 6-வது இடத்திலும் ரொரன்ரோ 11-வது இடத்திலும் உள்ளது.
ஆசிய நாடுகளில் டோக்கியோ நகரம் 3-வது இடத்திலும் சியோல் 10-வது இடத்திலும் உள்ளது. சீனாவில் பீஜிங் நகரம் 32-வது இடத்திலும் ஷாங்காய் நகரம் 33-வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் பெங்களூர் (81 வது), மும்பை (85 வது) இடங்களில் தெரிவாகியுள்ளது.
முதல் பத்து இடங்கள்:
- லண்டன்
- டோக்கியோ
- மெல்போர்ன்
- முனிச்
- பெர்லின்
- மொன்றியல்
- பாரிஸ்
- சூரிச்
- சிட்னி
- சியோல்
உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரமாக மீண்டும் தெரிவான லண்டன்: பட்டியல் இதோ!
Reviewed by Author
on
August 01, 2019
Rating:

No comments:
Post a Comment