பாவத்தை போக்க.. வாள்களால் தங்கள் தலையையே வெட்டி திறக்கும் வழிபாட்டாளர்கள்.. 31 பேர் பலி
ஆண்டுதோறும் ஆஷூரா எனப்படும் மொகரம் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நேற்று தங்கள் இரத்தத்தை பகிரங்கமாக சிந்தினர்.
ஆயிரக்கணக்கான ஷியா வழிபாட்டாளர்கள் முகமது நபியின் பேரனின் நினைவாக தங்களை வெட்டிக் கொண்டு ஆஷுரா பண்டிகையை குறித்தனர்.
ஆஷூரா திருவிழா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஹ்ரைன், ஈராக், ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் விமர்சியாகும்.
இந்நிலையில், ஈராக் தலைநகர் Baghdad-ற்கு அருகே உள்ள புனித நகரமான கர்பலாவில் செவ்வாய்க்கிழமை, ஆயிரக்கணக்கானோர் மத வழிபாட்டிற்காக இமாம் ஹுசைன் சன்னதிக்கு ஓடியதால் நடைபாதை இடிந்து விழுந்ததில் 31 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 100 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்விற்காக Baghdad-ற்கு தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் நூறாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடுவது வழக்கம்.
சமீபத்திய வரலாற்றில் ஆஷூரா பண்டிகையின் போது ஏற்பட்ட மிக மோசமான விபத்தாக இந்த நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய ஆண்டுகளில், திருவிழாவிற்கு இரத்த சிந்துவது பிரபலமாகி வருகிறது, இந்த விழா ஷியா வழிபாட்டாளர்களுக்கான முக்கியமான நிகழ்வாகும், மேலும் நபிகள் நாயகத்தின் பேரன் ஹுசைன் இப்னு அலி இறந்ததை நினைவுகூறும் நாளாகும்.

பண்டிகையின்போது மக்கள் தங்களை கத்திகளாலும் வாள்களாலும் வெட்டிக் கொள்கிறார்கள், பலர் இதன் மூலம் தங்கள் பாவங்களைத் தூய்மைப்படுத்துகிறார்கள் என்று நம்புகிறார்கள்.
680-ல் கர்பலா போரில் ஹுசைன் இப்னு அலி இறந்ததை இந்த நிகழ்வு குறிக்கிறது, நபி பேரன் யாசித் 1 உடனான போரில் தோல்வியடைந்தார். முகமதுவின் சரியான வாரிசு யார் என்ற தகராறால் இந்த மோதல் ஏற்பட்டது.

ஷியா வழிபாட்டாளர்கள் ஹுசைன் இப்னு அலி சுய தியாகச் செயலில் அவரது மரணத்திற்கு விருப்பத்துடன் சென்றதாக நம்புகிறார்கள். சில விமர்சகர்கள் கடந்த காலங்களில் ஆஷுரா திருவிழாவை விமர்சித்து பேசியுள்ளனர், இது பங்கேற்பாளர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

பாவத்தை போக்க.. வாள்களால் தங்கள் தலையையே வெட்டி திறக்கும் வழிபாட்டாளர்கள்.. 31 பேர் பலி
Reviewed by Author
on
September 12, 2019
Rating:
No comments:
Post a Comment