முல்லைத்தீவில் தமிழ் சட்டத்தரணிகள் மீது பௌத்தபிக்குகள் தாக்குதல்! மூவர் வைத்தியசாலையில்!
இது தொடர்பில் சட்டத்தரணிகள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த சமயத்தில், அந்த இடத்திற்கு சென்று நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அவர்களுடன் சென்ற பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தாக்குதலில் காயமடைந்த மூவர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களில் ஒருவர் ஆலய பூசகர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் பௌத்த பிக்குக்களால் தாக்கப்பட்டோம் என குறிப்பிட்டு, சட்டத்தரணிகளான சுகாஷ், கணேஷ்வரன் உள்ளிட்ட மூவர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முல்லைத்தீவில் தமிழ் சட்டத்தரணிகள் மீது பௌத்தபிக்குகள் தாக்குதல்! மூவர் வைத்தியசாலையில்!
Reviewed by Author
on
September 24, 2019
Rating:

No comments:
Post a Comment