செம்மலை நீராவியடி விவகாரம்! சைவ மகா சபை கடும் கண்டனம் -
செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் புத்த பிக்கு உடல் தகனம் செய்யப்பட்டதை எதிர்த்த பொதுமக்கள், சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமைக்கு சைவ மகா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீதி மன்ற உத்தரவையும் மீறி நடைபெற்ற நீராவியடி பிள்ளையார் ஆலய புனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்தி சைவத் தமிழர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் பெளத்த துறவியின் உடல் தகனம் செய்யப்பட்டமை நீதி கேட்ட சட்டதரணி பொதுமக்கள் தாக்கப்பட்டமையை சைவ மக்கள் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தொடர்ந்து மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் தமிழர்களின் மரபுரிமைகளை பண்பாட்டு விழுமியங்களை பூர்வீக நிலத்திலேயே பாரதூரமாக அவமதிக்கின்ற செயற்பாடுகளை பிற இடங்களிலிருந்து வந்து மேலாதிக்கம் செலுத்தும் சக்திகள் நிறுத்த வேண்டும்.
மேற்படி சம்பவங்களிற்கு உடனடியாக நீதி கிடைக்க வழி செய்து நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்புக்குள்ளாக்கி சைவத் தமிழர்களின் மனங்களை புண்படுத்தி மனித மரபுரபுரிமைகளுக்கு குரல் கொடுத்தோரை தாக்கிய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களை கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன், உண்மையை நேசிக்கும் அனைத்து மதத்தவரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இந்த கொடுஞ் செயலை கண்டித்து எதிர்காலத்தில் நடைபெறாது இருக்க ஆவன செய்யுமாறும் வேண்டுகின்றோம்.
செம்மலை நீராவியடி விவகாரம்! சைவ மகா சபை கடும் கண்டனம் -
Reviewed by Author
on
September 24, 2019
Rating:

No comments:
Post a Comment