இந்த உணவுகள் எல்லாம் நீரில் ஊற வைத்து சாப்பிடுங்க..... நன்மைகள் ஏராளமாம்!
அந்தவகையில் எந்த உணவுப் பொருட்களை நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்றும், அப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை என்னென்ன என்பதை பார்ப்போம்.
வெந்தயம்
ஏனெனில் இது செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படும். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் பராமரிக்கலாம்.
மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலியைத் தவிர்க்கலாம்.
கசகசா
உடலின் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
கொழுப்புக்களைக் கரைக்கக்கூடியது மற்றும் உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைக் குறைக்கும். மேலும் இது வயிற்றுப் போக்கைத் தடுக்கும்.
ஆளி விதை
காலையில் எழுந்ததும் உண்பதால், கொலஸ்ட்ரால் பிரச்னைகள் குறையும்.
இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.
மேலும் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த ஆளி விதையை சாப்பிட்டால், குடல் ஆரோக்கியம் மேம்படும்.
உலர் திராட்சை
உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறையும். சருமம் ஆரோக்கியமாகவும், பிரச்னைகளின்றியும் அழகாக இருக்கும்.
இரத்த சோகை மற்றும் சிறுநீரக கல் பிரச்னை இருப்பவர்கள், ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் அந்த பிரச்சனைகளில் இருந்து விரைவில் குணமாகலாம்.
உலர் திராட்சையுடன் சிறிது சோம்பை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், அசிடிட்டி பிரச்சனை முழுமையாக குணமாகும்.
பாசிப் பயறு
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் என்பதால், நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.
பாசிப் பயறில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
பாதாம்
ஊற வைத்த பாதாம் செரிமானத்திற்கு பெரிதும் உதவி புரியும்.
அதிலும் இது கொழுப்பை செரிக்க உதவும் லிபேஸ் என்னும் நொதியை வெளியிடச் செய்யும். ஊற வைத்த பாதாமில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவி, எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.
அதில் உள்ள வைட்டமின் பி17 மற்றும் ஃபோலிக் அமிலம், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதோடு, பிறப்புக் குறைபாட்டையும் குறைக்கும்.
இந்த உணவுகள் எல்லாம் நீரில் ஊற வைத்து சாப்பிடுங்க..... நன்மைகள் ஏராளமாம்!
Reviewed by Author
on
September 15, 2019
Rating:
No comments:
Post a Comment