ஜேர்மன் மருந்தகம் ஒன்றில் மருந்து வாங்கி உட்கொண்ட தாயும் குழந்தையும் பலி! -
ஜேர்மனியின் Cologneஇலுள்ள மருந்தகம் ஒன்றில் மருந்து வாங்கி உட்கொண்ட 28 வயது பெண் ஒருவரும், சமீபத்தில்தான் பிறந்த அவரது கைக்குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிசார் நேற்று தெரிவித்தனர்.
அந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் (cesarean) பிறந்துள்ள நிலையில், அந்த தாய் ஒரு குறிப்பிட்ட மருந்தை வாங்கி உட்கொண்டுள்ளார்.
அதேபோல், அதே மருந்தை வாங்கி உட்கொண்ட மற்றொரு பெண்ணுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டதையடுத்து அவர் அந்த மருந்தை உட்கொள்ளுவதை நிறுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களையும் குறித்து மருத்துவர் ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த குறிப்பிட்ட கிளை மருந்தகத்தில், குறிப்பிட்ட வகை மருந்துகளை வாங்குவதில் எச்சரிக்கையக இருக்குமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அந்த மருந்தகம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. என்றாலும் இந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் பலருக்கு தெரியாமலே உள்ளது என உள்ளூர் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

ஜேர்மன் மருந்தகம் ஒன்றில் மருந்து வாங்கி உட்கொண்ட தாயும் குழந்தையும் பலி! -
Reviewed by Author
on
September 25, 2019
Rating:
No comments:
Post a Comment