தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையை தூண்டும் ஞானசார தேரர் -
தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடாகவே, நீதிமன்ற உத்தரவை பொலிஸாரன் துணையுடன் மீறி செம்மலையில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த சம்பவத்தை வன்மையாககண்டிக்கிறோம் என காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் நீதி செத்துவிட்டதா? ஏன்று கேட்கும் வகையில் இச்சம்பவம் அமைந்துள்ளது. ஞானசாரதேரர் போன்றவர்களா? கல்முனைத்தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்துவைப்பது?
நீதி மன்ற உத்தரவையும் மீறி நடைபெற்ற நீராவியடி பிள்ளையார் ஆலய புனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்தி தமிழர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் பெளத்த துறவியின் உடல் தகனம் செய்யப்பட்டமை நீதி கேட்ட சட்டதரணி பொதுமக்கள் தாக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தொடர்ந்து மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் தமிழர்களின் மரபுரிமைகளை பண்பாட்டு விழுமியங்களை பூர்வீக நிலத்திலேயே பாரதூரமாக அவமதிக்கின்ற செயற்பாடுகளை பிற இடங்களிலிருந்து வந்து மேலாதிக்கம் செலுத்தும் சக்திகள் நிறுத்த வேண்டும்.
சிங்களப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சிங்கள மக்களை வரவழைத்து கலகொட அத்தே ஞானசார தேரரே முன்னின்று மேற்கொண்டிருக்கும் இச்செயலானது தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையை தூண்டும் செயற்பாடேயாகும்.
பொறுப்புடன் செயற்படவேண்டிய பௌத்த துறவிகளும், சட்டம்-ஒழுங்கை பேணிப்பாதுகாக்க வேண்டிய பொலிஸாரும் தமிழர்களுக்கு எதிரான இச்செயற்பாட்டில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளமையானது மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்கு இலங்கைத் தீவை கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடாகவே அமைந்துள்ளது.
அவ்வகையில் அனர்த்தம் ஏதும் ஏற்படுவதற்கு முன்னதாக இவ்விடயத்தில் உரிய நீதியை நிலைநாட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனமெடுக்க வேண்டுமென நாம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையை தூண்டும் ஞானசார தேரர் -
Reviewed by Author
on
September 25, 2019
Rating:

No comments:
Post a Comment