யாழில் காணிகளை மீள கையளிக்க நடவடிக்கை! மக்களிடம் விண்ணப்பம் கோரல் -
இந்த திட்டத்தின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தருவதன் மூலம் அக்காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு உரிமைகோருபவர்களிடம் மீளக்கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனடிப்படையில் இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்களை கேட்டுக்கொள்கின்றோம்.
குறித்த விண்ணப்பப் படிவத்தினை ஆளுநர் செயலகம், யாழ். மாவட்ட செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் வடமாகாண சபையின்https://np.gov.lk/ என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.
காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை இணைத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் 'காணி கோரல் ' வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி , யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
யாழில் காணிகளை மீள கையளிக்க நடவடிக்கை! மக்களிடம் விண்ணப்பம் கோரல் -
Reviewed by Author
on
September 01, 2019
Rating:
Reviewed by Author
on
September 01, 2019
Rating:


No comments:
Post a Comment