வடமாகாண தமிழர்களை ஒன்று திரளுமாறு அழைப்பு -
முல்லைத்தீவில் சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை பெருமெடுப்பிலான போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்குவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழர் மரபுரிமை இயக்கத்தின் இணை ஒருங்கினைப்பாளர் நவநீதன் தெரிவித்துள்ளார்.
இன்று 24/09/2019 காலை 11 மணிக்கு முல்லைத்தீவு பழைய வைத்தியசாலை (உண்ணாப்பிலவு வைத்தியசாலை) முன்பாக ஒன்று திரண்டு, பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று, அங்கு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படும்.
அரசாங்கத்திற்கான மகஜரை மாவட்ட செயலரிடம் வழங்கப்படும். ஐ.நா சபைக்கான மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, நாளை வடமாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். வடக்கு சட்டத்தரணிகள் நாளை முல்லைத்தீவு கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றுகிறார்கள்.
வடமாகாண தமிழர்களை ஒன்று திரளுமாறு அழைப்பு -
Reviewed by Author
on
September 24, 2019
Rating:

No comments:
Post a Comment