சிறுபான்மையினரை அடக்கி ஆளவே சிங்கள அரசு முனைகின்றது சட்டத்தரணி செல்வராஜ் டினேசன்
தேரர்களின் அடாவடித்தனத்தினையும் அராஜகத்தையும் அரசாங்கம் அடக்கவில்லையானால் இலங்கையை அழிவு பாதைக்கே இட்டுச்செல்லும் என தமிழரசு கட்சியின் இளைஞர் அணி உபதலைவரும் சட்டத்தரணியுமாகிய செல்வராஜ் டினேசன் தெரிவித்துள்ளார்
செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் நீதிமன்ற கட்டளையையும் மீறி தேரரின் உடலை தகனம் செய்தமை மற்றும் சட்டத்தரணி தாக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் கட்டளையையும் மீறி நீராவியடி பிள்ளையார் தீர்த்த கேணியின் அருகில் தேரரின் உடலை தகனம் செய்ததினை வன்மையாக கண்டிப்பதோடு இது இலங்கையின் நீதிதுறைக்கு ஏற்பட்ட பாரிய சவாலாகும் .
நீதிமன்ற கட்டளையினை மீறி தேரரின் உடலை எரிக்க முற்பட்ட பொழுது
நீதிமன்ற கட்டளையுண்டு அதனை மீற முடியாது என சட்டத்தரணி கூறிய பொழுது “ஆம்துருக்கு முதலிடம் கொடுக்கனும் உனக்கு தெரியாத” என தேரர் கூறுவது தான் பௌத்த துறவி நீதிமன்ற கட்டளையைவிட தேரருக்கே முக்கிய கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் இருப்பதை வெளிப்படையாக உணர்த்துகின்றது இது பௌத்த பேரினவாதத்தின் உச்சகட்டமாகும்.
இராணுவத்தினால் அழிந்தவர்களைவிட ஆணவத்தினால் அழிந்தவர்களே அதிகம். இந்த அரசாங்கம் தேரர்களில் அடாவடித்தனத்தினையும் அராஐகத்தையும் கட்டுப்படுத்தவில்லையென்றால் இலங்கையை அழிவு பாதைக்கே இட்டுச்செல்லும்.
இச்சம்பத்தினை கண்டித்து தமிழர் தாயகம் எங்கும் போராட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வடமாகாண சட்டத்தரணிகள் பணி பகிஷ்கரிப்புனை மேற் கொண்டும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை . பொலிசார் நீதிமன்ற கட்டளையை மீறியவருக்கு பாதுகாப்பை வழங்குகின்றது. சிறுபான்மையினரை அடக்கி ஆளவே சிங்கள அரசு முனைகின்றது. இன்று நீதிமன்றத்தின் சுகந்திரம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி வலுவிழந்து காணப்படுகின்றது.
எனவே பாமர மக்களுக்கு ஒரு சட்டம் அதிகாரிகளுக்கு ஒரு சட்டம் அரசியல் வாதிகளுக்கு ஒரு சட்டம் தேரர்களுக்கு ஒரு சட்டம் என எங்கும் சட்டங்கள் வகுக்கப்படவில்லை எனவே பொதுவான சட்டத்தின் கீழ் சட்டத்தை மீறியவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டம் அனைவருக்கும் சமம் என்று நிருபிக்கபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
September 30, 2019
Rating:

No comments:
Post a Comment