ஜனாதிபதி தேர்தலுக்கான திகதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் தேர்தல்கள் ஆணையாளர்! -
செப்டம்பர் 15ம் திகதி முதல் ஒக்டோபர் 15ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், 15ம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ திகதியை அறிவிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விரிவாக கலந்துரையாடி வருகின்றனர். அத்துடன், தேவையான ஆவணங்களையும் தயாரித்து வருகின்றனர்.
வேட்புமனு தாக்குதல் குறித்த அறிவிப்பு வெளியாகும் அதே நாளில், வேட்புமனு தாக்குதல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும்.
ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்ப திகதி நவம்பர் 15 ஆகும். அதேபோல், செப்டம்பர் 15ம் திகதி முதல் ஒக்டோபர் 15ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யக்கூடியதாக இருக்கும்.
எவ்வாறாயினும், தேர்தல் சட்டங்களை அமல்படுத்த நாங்கள் தயாரகவே இருக்கின்றோம் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல்கள் குறித்து ஆராய தேர்தல்கள் ஆணையம் எதிர்வரும் 9ம் திகதி கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் தேர்தல்கள் ஆணையாளர்! -
Reviewed by Author
on
September 06, 2019
Rating:

No comments:
Post a Comment