கோத்தபாயவின் வெற்றி உறுதியானதா? கவலையில் சஜித்! வாக்கு வங்கிகளில் ஏற்பட்ட மாற்றம்! -
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
அதற்கமைய கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்களின் மனநிலையின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி மற்றும் அதன் பங்காளி கட்சிகளுடன் சேர்ந்த 6622261 வாக்குகளை பெற்றிருந்தது.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி 4207728 வாக்குகளை பெற்றிருந்தது. இந்த தரவுகளுக்கு அமைய கோத்தபாயவுக்கு சுமார் ஆறு மில்லியன் வாக்குகளும், சஜித் பிரேமதாஸவிற்கு சுமார் நான்கு மில்லியன் வாக்குகளும் உள்ளன.
சுமார் இரண்டு மில்லியன் வாக்குகள் முன்னிலையில் இருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் ராஜபக்ஷர்களின் செல்வாக்கு மக்கள் மத்தியில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் கருத்துக் கணிப்பு முடிவு ஒன்று வெளியாகியதற்கமைய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னணி வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுபான்மை கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தன. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பெற்ற ஆறு மில்லியன் வாக்குகளும் சிங்கள மக்களால் வழங்கப்பட்டவையாகும். இதன் மூலம் கோத்தபாய வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கோத்தபாயவின் வெற்றி உறுதியானதா? கவலையில் சஜித்! வாக்கு வங்கிகளில் ஏற்பட்ட மாற்றம்! -
Reviewed by Author
on
September 29, 2019
Rating:
Reviewed by Author
on
September 29, 2019
Rating:


No comments:
Post a Comment