மன்னார் வீரர்கள் முதல் முறையாக ஆணழகன் போட்டியில் பதக்கங்கள்...படம்
வடமாகாண சபையிம் ஏற்பாட்டில் கடந்த 07-09-2019-08-09-2019 வரை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மாகாணவிளையாட்டு விழா நிகழ்வானது சிறப்பாக இடம் பெற்றது.
குறித்த விளையாட்டு நிகழ்வில் ஆணழகன் போட்டியில் முதன் முறையாக மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்து (Bodybuilding) 65-70kg எடை பிரிவில் அலன் சொய்சா வெண்கல பதக்கமும்
75-80Kg எடை பிரிவில் லியோன் ஜோயல் வெண்கல பதக்கமும் பெற்று மாவட்டங்களின் அடிப்படையில் 3ஆம் இடத்தையும் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
வடமாகாண ரீதியில் மன்னார் மாவட்டம் Bodybuilding இல் பங்குபற்றுவது இதுவே முதல் தடவையும் முதல் தடவையிலே பதக்கங்களை பெற்றதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடதக்கதாகும்.
நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்திப்பாராட்டுகின்றோம்.
மன்னார் வீரர்கள் முதல் முறையாக ஆணழகன் போட்டியில் பதக்கங்கள்...படம்
Reviewed by Author
on
September 09, 2019
Rating:

No comments:
Post a Comment