உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழன்-சிவன்
இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது.
நிலவின் அருகே 2.1 கிலோமீற்றர் தொலைவுக்கு அது அருகே சென்றபோது திடீரென விஞ்ஞானிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் விஞ்ஞானிகள் உடனான கட்டுப்பாட்டை லேண்டர் இழந்ததால், இஸ்ரோவின் தலைவராக இருக்கும் சிவன், மிகுந்த வேதனையடைந்தார்.
அவரை மோடி பார்க்க வந்த போது, தன்னை அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். மோடி அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
இருப்பினும் சிவன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான கடைசி பகுதி திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்படவில்லை. அந்த பகுதியில் தான் நாம் லேண்டருடனான தகவல் தொடர்பை இழந்துள்ளோம். அடுத்த 14 நாட்களில் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

இப்படி இதுவரை எந்த நாடும் தரையிறக்காத நிலவின் தென் துருவத்திற்கு ஆய்வூர்தியை அனுப்பிய சிவனிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஒட்டு மொத்த உலகநாடுகளும் இந்த சந்திராயன்2-வைப் பற்றி பேசும் அளவிற்கு சிவன் பெருமையடைய வைத்துவிட்டார்.
இப்படி தற்போது உலகமே பேசும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் சிவன், ஆரம்ப காலத்தில் எப்படி இருந்தார் என்பதைப் பற்றி பார்ப்போம்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1957-ஆம் ஆண்டு பிறந்த சிவன், மேலசரக்கல்விளை கிராமத்தில் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர். மாந்தோப்பு வைத்திருந்த தந்தைக்கு உதவியாக விடுமுறை நாட்களில் பணியாற்றி, ஆட்கூலியை மிச்சப்படுத்தி வாழ்ந்தவர்
தோட்ட வேளையில் தன் தந்தைக்கு தொடர்ந்து உதவ வேண்டும் என்பதற்காகவே அருகில் உள்ள தென் திருவாங்கூர் இந்து கல்லூரியில் சேர்ந்தார். பொறியியல் படிப்பதைக் கனவாகக் கொண்டிருந்த சிவன், பி.எஸ்.சி. மட்டுமே படிக்க வைக்க முடியும் என தந்தை கூறியதால் மனமுடைந்து ஒரு வாரம் வீட்டில் பட்டினிப் போராட்டம் நடத்தினார்.

அதன் பின், குடும்ப சூழலை உணர்ந்து பி.எஸ்.சி. யே படித்தார்.
சிவன் கல்லூரி செல்லும் வரை காலில் செருப்பு கூட அணியாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பேன்ட் இல்லாததால் பெரும்பாலும் வேட்டியிலேயே மாணவப் பருவம் கழித்தார்.
இருப்பினும் தன் தந்தை ஒரு நாளும் தங்களை பட்டினி போட்டதில்லை என்றும், வயிறாற 3 வேளை உணவு வழங்குமளவு வசதியோடு தன்னை வளர்த்ததாகவும் அவர் பெருமையாக பேட்டிகளில் கூறியுள்ளார்.
சிவனின் தந்தை இளங்கலை முடித்ததும் அவரது பொறியியல் கனவை சிதைத்ததை எண்ணி வருத்தப்பட்டதாகவும், பின் தன் தோட்டத்தை விற்று சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்க வைத்ததார்.
இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்.இ-யில் (IISc) ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் துறையில் மேற்படிப்பு முடித்தார். பல்வேறு பணி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட நிலையில் 1982-ல் இஸ்ரோவில் ராக்கெட் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பணியில் சேர்ந்தார்.
அதன்பின் மும்பை ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்றார். பின் படிப்படியாக கடின உழைப்பால் பதவி உயர்வு பெற்ற சிவன், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராகவும் பணியாற்றினார்.
2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்ற சிவனின் தலைமையின் கீழ், உலகில் எந்த நாடும் ஆய்வூர்தி அனுப்பிடாத நிலவின் தென்துருவத்துக்கு சந்திராயன் 2-ஐ கடந்த ஜூலை 22-ஆம் திகதி அனுப்பினார்.
2 புள்ளி 1 கிலோ மீற்றரே இருக்கும் போது விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்ததால், நொறுங்கிப் போனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழன்-சிவன்
Reviewed by Author
on
September 09, 2019
Rating:
No comments:
Post a Comment