மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 4வது தேசிய உருள் பந்து வெற்றிக்கிண்ண போட்டி-படங்கள்
மன்னார் மாவட்ட உருள் பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை உருள் பந்து சம்மேளனத்தினால் 4 ஆவது தேசிய உருள் பந்து வெற்றிக்கிண்ண போட்டி ( National Rool Ball Championship) நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி உருள் பந்து மைதானத்தில் இடம்பெற்றது.
இலங்கை உருள் பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பா.தவேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.குறித்த வெற்றிக்கிண்ண போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட உருள் பந்து சங்க பிரதிநிதிகள் பாடசாலை அதிபர் வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
குறித்த போட்டியில் மன்னார், கிளிநொச்சி ,யாழ்ப்பாணம் ,கொழும்பு ஆகிய மாவட்டங்களை பிரதி நிதிப்படுத்தி அணி வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.
14 ,17 வயது பிரிவுகள் மற்றும் 17 வயதிற்கு மேற்பட்ட பிரிவு ஆகிய பிரிவுகளாக போட்டிகள் இடம் பெற்றது.
17 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அணியில் மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய அணிகள் கலந்து கொண்டன.இதன் போது மன்னார் அணி ஐந்துக்கு ஒன்று என்ற ரீதியில் மன்னார் அணி வெற்றி பெற்றது.
17 வயது மேற்பட்ட ஆண்கள் அணியில் கொழும்பு மற்றும் மன்னார் அணிகள் பங்கு பற்றி கொழும்பு அணி வெற்றி பெற்றது.
17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அணியில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் அணிகள் மோதி மன்னார் அணி வெற்றி பெற்றது.
14 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணியில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் அணிகள் மோதி யாழ்ப்பாண அணி வெற்றி பெற்றது.
வெற்றியீட்டிய அணிக்கு பதக்கங்கள் , சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கேடயங்கள் வருகை தந்த விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

Reviewed by Author
on
October 13, 2019
Rating:

No comments:
Post a Comment